ராமநாதபுரத்தில் குடிநீர் பஞ்சம்: ஜெயலலிதா கவலை
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் ரூ. 300 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.
இதற்காக இன்று காலை 9 மணிக்கு சிறப்பு விமானத்தில் ஜெயலலிதா மதுரை புறப்பட்டார். 10.15 மணிக்கு மதுரையை அடைந்தஅவரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தஹெலிகாப்டர் மூலம் அவர் ராமநாதபுரம் சென்றார்.
ராநாதபுரத்தில் அவரை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஆகியோர் வரவேற்றனர். ஜெயலலிதாவை வரவேற்கஆயிரக்கணக்கான மக்கள் ஹெலிபேடில் கூடியிருந்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தில் வள்ளல் சீதகாதி சேதுபதி கல்லூரி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறுநலத் திட்டங்களைத் துவக்கி வைத்து ஜெயலலிதா பேசுகையில்,
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் கடலுக்குள் சென்று நிம்மதியாக மீன் பிடிக்க முடிவதில்லை என்ற செய்தி எனக்குப் பெரும்கவலையை அளித்துள்ளது.
தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துவதை இலங்கை கடற்படை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
என்னைக் கவலையடையச் செய்துள்ள மற்றொன்று ராமநாதபுரத்தில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பஞ்சம்.
இந்த இரண்டு பிரச்சனைகளையும் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் தமிழக அரசு ஈடுபடும் என்றார் ஜெயலலிதா.
வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மோகன் தலைமையில் நடந்த இந்த விழாவில் ரூ. 140 கோடியில்மன்னார்வளைகுடா சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தையும், மின்துறை, நெடுஞ்சாலைத்துறைகளின் திட்டங்களையும்ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி ராமநாதபுரத்தில் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. ராமநாதபுரம் கடல்பகுதியிலும் கண்காணிப்பை கடலோரக் காவல்படை தீவிரப்படுத்தியுள்ளது.
இந் நிலையில் வரும் திங்கள்கிழமை ஜெயலலிதா சேலம் செல்கிறார். ரூ. 200 கோடியில் சேலத்தில் சிறப்புத் திட்டங்களைத் துவக்கிவைக்கிறார். இதையொட்டி அங்கு ஹெலிபேட் தயார் செய்யப்பட்டு வருகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications