வைகோவுடன் இல.கணேசன் சந்திப்பு: போலீஸ் ஒட்டுகேட்பு
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர்இல.கணேசன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
காலை வேலூர் சிறைக்குச் சென்ற இல.கணேசன் வைகோவை சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது சிறைக் கண்காணிப்பாளரும்உடனிருந்தார். இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சந்திப்பின்போது இருவரும் பேசியதை கண்கணிப்பாளர்சென்னை மேலிடத்துக்கு அனுப்பி வைத்தார்.
வைகோவை சந்தித்துவிட்டு வெளியே வந்த கணேசன் நிருபர்களிடம் பேசுகையில்,
வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதால் தமிழக அரசு கலைக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறியிருப்பது தவறு. இந்த விவகாரம் அவ்வளவு மோசமாகிவிடவில்லை.
விடுதலைப் புலிகளை எதிர்க்கும் விஷயத்தில் பா.ஜ.கவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், வைகோவை பொடாசட்டத்தில் கைது செய்திருப்பதை கடுமையாக எதிர்க்கிறோம். இந்தக் கைது தேவையில்லாதது. மதிமுக தேச விரோத கட்சியல்ல.
மதிமுகவைத் தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு தான் முடிவெடுக்க முடியும்.
வைகோ கைது விவகாரத்தில் நீதிமன்றமும் சட்டமும் தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் நல்ல முடிவை எடுக்கும் என்றுநம்புகிறோம் என்றார்.
இந்தச் சந்திப்பு முடிந்தவுடன் அவர்கள் பேசிய விவரங்கள் உடனடியாக சென்னை காவல்துறை தலைமையகத்துக்குப் பறந்தது.இந்தப் பேச்சு விவரங்கள் மேலிடத்துக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications