வன்னியர் சங்க கூட்டத்தில் பாமக தொண்டர் குத்திக் கொலை
உத்திரமேரூர்:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்ட வன்னியர் சங்கப் பொதுக் கூட்ட மேடையருகே அக்கட்சித்தொண்டர் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வன்னியர் சங்கம் சார்பில் "வன்னியர் வாழ்வுரிமை மாநாடு" நேற்றுநடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டாக்டர் ராமதாசும் கலந்து கொண்டார்.
நேற்று இரவு இந்த மாநாடு நடந்து கொண்டிருந்த போது மாநாட்டுக் கூட்டத்தின் மேடையருகே ஏராளமானபாமகவினர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று அங்கு வந்த ஒரு கும்பல் பாமக தொண்டரான அச்சையன் என்பவரை சுற்றி வளைத்துக்கொண்டு பயங்கரமாகத் தாக்கினர்.
இந்தத் திடீர்த் தாக்குதலால் தடுமாறிக் கீழே விழுந்த அச்சையன் பின்னர் எழுந்து ஓட முயற்சித்தார். ஆனால்அவரைத் தப்பிக்க முடியாத படி சூழ்ந்து கொண்ட அந்தக் கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களால்தாக்க ஆரம்பித்தது.
பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் திடீரென்று தான் வைத்திருந்த கத்தியால் அச்சையனின் வயிற்றில்சராமாரியாகக் குத்தினான்.
இதனால் நிலைகுலைந்து போன அச்சையன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.இதையடுத்து அந்தக் கொலைக் கும்பல் தப்பித்து ஓடிவிட்டது.
இந்தத் திடீர்க் கொலைச் சம்பவத்தால் வன்னியர் சங்க மாநாட்டுக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொலை செய்த கும்பலைச் சேர்ந்தவர்களைத்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications