தேசம் வளர உழைப்பேன்: கலாம்
டெல்லி:
ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் அப்துல் கலாம் இந்த நாட்டை வளம் உள்ளதாக்கவும், நோய் நொடிகள்இல்லாத தேசமாக மாற்றவும், வளர்ச்சியடைந்த தேசமாகவும் மாற்ற முயல்வேன் என்றார்.
தனது வெற்றி குறித்த செய்தி கிடைத்தவுடன் நிருபர்களைச் சந்தித்த அவர், இந்த வெற்றிக்காக கடவுளுக்கும், என்பெற்றோருக்கும், நான் கண்ட உலகின் மிகச் சிறந்த விஞ்ஞான மூளைகளான விக்ரம் சாராபாய், சதீஷ் தாவன், பிரம்ம பிரகாஷ்,என்னுடன் இணைந்து பணியாற்றிய சக ஊழியர்கள், இந்த தேச மக்கள், என் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தேசம் குறித்து எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. 20 ஆண்டுகளில் நாம் புதிய உயரத்தை எட்டுவோம். எனக்குநம்பிக்கை உள்ளது. அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முயல்வேன்.
ஜனாதிபதியானது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. பலத்தை மட்டும் தான் பலம் மதிக்கும். இதனால் நமது நாட்டின் பலத்தைஉறுதிப்படுத்த வேண்டும்.
அரசியல்வாதிகளுடன் என்னால் செயல்பட முடியுமா என்று கேட்கிறார்கள். நான் 6 பிரதமர்களுடன் நேரடியாக இணைந்துபணியாற்றியிருக்கிறேன். அணு குண்டில் இருந்து ஏவுகணை வரை அரசியல்வாதிகளுடன் பேசித் தான் நாங்கள் செயல்பட்டுவந்தாம். எனவே, எனக்கு அரசியல்வாதிகள் புதியவர்கள் அல்ல. அரசியல்வாதிகளை எப்படி கையாள்வது என்று எனக்குத்தெரியும்.
என்னை எதிர்த்துப் போட்டியிட்ட கேப்டன் லட்சுமி செகலை நான் மிகவும் மதிக்கிறேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்டதால்அவர் என் எதிரி அல்ல. எனக்கு எல்லோருமே நண்பர்கள் தான். அவரும் இந்த தேசம் வளர வேண்டும் என நினைப்பவர். இந்ததேசத்தை உயிரென மதிக்கும் உயர்ந்த பண்பாளர் என்றார் கலாம்.
நீங்கள் நடுநிலையான ஜனாதிபதியாக இருப்பீர்களா என்று கேட்டபோது, நான் ஜனாதிபதியாக இருப்பேன். அதில் நடுநிலைஜனாதிபதி, ஒருசார்பான ஜனாதிபதி எல்லாம் கிடையாது என்றார்.
துணை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ள பைரோன் சிங் செகாவத்துடன் வந்து தன்னைச் சந்தித்து வெற்றிக்கானசான்றிதழைத் தந்த அமைச்சர் பிரமோத் மகாஜனிடம் பேசிய கலாம், ஒரு சாட்டிலைட்டை (என்னை) விண்ணில்செலுத்திவிட்டீர்கள். இப்போது இன்னொரு சாட்டிலைட்டை (செகாவத்) விண்ணில் ஏவும் பணி மிச்சம் உள்ளது. அதையும் இந்தராக்கெட் பூஸ்டர் (பிரமோத் மகாஜன்) சிறப்பாக செய்து முடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications