அப்துல் கலாம் பெரும் வெற்றி: அடுத்த ஜனாதிபதியாகிறார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குடியரசுத் தலைவர் தேர்தலில் டாக்டர் அப்துல் கலாம் வெற்றி பெற்றார். இதையடுத்து 71 வயதான அப்துல் கலாம் வரும் 25ம்தேதி நாட்டின் 12வது இந்திய ஜனாதிபதியாக பதவியேற்கிறார்.

வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே அப்துல் கலாம் மிகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இடதுசாரிக் கட்சி வேட்பாளர் கேப்டன் லட்சுமி செகலைவிட 9 மடங்கு அதிக வாக்குகளைகலாம் பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகள் 4,785. இதில் 174 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதில் கலாம்4,152 வாக்குகளைப் பெற்றார். லட்சுமி செகல் 459 வாக்குகள் பெற்றார்.

வாக்கு விவரம்: (வாக்குகளின் மதிப்புப்படி)

அப்துல் கலாம்- 9,22,884
லட்சுமி செகல்- 1,07,366

மொத்த எம்.பிக்கள் 760 பேரில் அப்துல் கலாமுக்கு 638 பேரின் வாக்குகளும் லட்சுமி செகலுக்கு 80 பேரின் வாக்குகளும்கிடைத்தன. 42 எம்.பிக்களின் ஓட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

இடதுசாரிக் கட்சிகளின் கோட்டையான மேற்கு வங்கம், கேரளம், திரிபுராவில் செகல் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றார். ஆனால்,ஹரியாணா, பாண்டிச்சேரி, அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் லட்சுமிசெகலுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.

பதிவான மொத்த வாக்குகளில் கலாம் 89.58 சதவீத வாக்குகளும் லட்சுமி செகல் 10.42 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் டாக்டர் அப்துல் கலாம் 217 வாக்குகளும், ஆந்திராவில் 264, மகாராஷ்டிராவில் 264, கர்நாடகத்தில் 202, பஞ்சாபில்87, ஒரிஸ்ஸாவில் 130, ஜம்மூ- காஷ்மீரில் 72, ஜார்க்கண்டில் 74, உத்தராஞ்சலில் 63 வாக்குகளும் பெற்றார்.

தமிழகத்தில் லட்சுமி செகல் 10 வாக்குகளும், ஆந்திராவில் 2, மகாராஷ்டிரத்தில் 9, கர்நாடகத்தில் 13, பஞ்சாபில் 4, ஒரிஸ்ஸாவில்12, ஜம்மூ- காஷ்மீரில் 2, ஜார்க்கண்டில் 5, உத்தராஞ்சலில் 3 வாக்குகளும் பெற்றார்.

மிக பலத்த பாதுகாப்புக்கு இடையே இந்த வாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்தப் போட்டியில் வெல்ல இருக்கும் அப்துல்கலாமுக்கு வாழ்த்துத் தெரிவிக்க டெல்லி ஏசியாட் கிராமத்தில் உள்ள கலாமின் வீட்டுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால், பாதுகாப்பு காரணமாக மக்களை அந்தத் தெருவுக்குள்ளேயே போலீசார் அனுமதிக்கவில்லை.

அவரது வீட்டைச் சுற்றி கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டு மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ஆனால், அவர்காலையிலேயே டி.ஆர்.டி.ஓவின் கெஸ்ட் ஹவுசுக்குப் போய்விட்டார்.

கலாம் வீட்டுக்கு விரைந்த துணை ஜனாதிபதி:

வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் இந்த வெற்றி குறித்தும் அதற்கான சான்றிதழை ஒப்படைக்கவும் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்பிரமோத் மகாஜன் அப்துல் கலாமை சந்திக்க கெஸ்ட் ஹவுசுக்கு விரைந்தார். அவருடன் துணை ஜனாதிபதி பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்நிறுத்தப்பட்டுள்ள பைரோன்சிங் செகாவத்தும் சென்றார்.

அங்கு கலாமிடம் சான்றிதழைத் தந்த மகாஜன், சார் நீங்கள் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டு வீட்டீர்கள் என்று கூறி கையோடு கொண்டு வந்திருந்தஇனிப்பை ஊட்டினார்.

வரும் 25ம் தேதி நாடாளுமன்றத்தின் மத்திய ஹாலில் நடக்கும் வண்ணமிகு விழாவில் டாக்டர் அப்துல் கலாம் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+