"எனக்கு ரேடியோ வேண்டும்": வைகோ கோரிக்கை
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வைகோ நாட்டு நடப்புகளைக் குறித்து அறிவதற்காக தனக்குரேடியோ வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தற்போது நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அது குறித்த தகவல்களை அறிந்து கொள்ளவேண்டும் என்று வைகோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தவிர தமிழக மற்றும் உலக நடப்புகள் குறித்தும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தான் ஆவலாகஇருப்பதாகவும் இதற்காக தனக்கு ஒரு ரேடியோ வழங்க வேண்டும் என்றும் சிறை அதிகாரிகளிடம் வைகோகோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் சிறையில் ரேடியோ வைத்துக் கொள்வதற்கு சட்டத்தில் இடமில்லை என்று சிறை அதிகாரிகள் மறுத்துவருவதாகத் தெரிகிறது.
இதையடுத்து இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக வக்கீல்கள் மனு தாக்கல் செய்ய முடிவுசெய்துள்ளனர்.
வைகோவுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு:
இதற்கிடையே சிறையில் உள்ள வைகோ தினமும் மாலை நேரங்களில் சட்டப் புத்தகங்களைத் தொடர்ந்து படித்துவருகிறார். அதனால் அந்நேரங்களில் தன்னைப் பார்க்க வரும் மதிமுக பிரமுகர்ளைச் சந்திக்க அவர் தயங்கிவருகிறார்.
இருப்பினும் மதிமுக பிரமுகர்களும் கட்சியின் முக்கியத் தலைவர்களும் சிறைக்குச் சென்று வைகோவைச் சந்தித்துவருகின்றனர். பலர் அவருக்குப் புத்தகங்களையும் அன்பளிப்பாகக் கொடுத்து வருகின்றனர்.
நலம் தரும் யோகாசனங்கள், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, பெய்யெனப் பெய்யும் மழை, காற்றுவெளியினிலே, ஒரு புளியமரத்தின் கதை, படகு வீடு, நபிகள் நாயகம் வரலாறு, குறுந்தொகை விளக்கம், சிலம்பின்கதைகள் என்று ஏராளமான புத்தகங்களை மதிமுக பிரமுகர்கள் வைகோவிடம் கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே கட்சிப் பிரமுகர்களுடன் வைகோ பேசும் விவரங்கள் அவ்வப்போது திரட்டப்பட்டு வருகின்றன.அவை உடனுக்குடன் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications