ராமேஸ்வரத்தில் கொண்டாட்டம்
ராமேஸ்வரம்:
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் வெற்றி பெற்றதையடுத்து அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் மக்கள் பெரும்கொண்டாட்டத்தில் உள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் வேட்டுகள் வெடிக்கப்பட்டு இந்த வெற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.
தேர்தல் முடிவுக்காக காலையில் இருந்த காத்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மக்கள் அறிவிப்பு வெளியானவுடன் தெருக்களில் கூடிஒருவருக்கு ஒருவர் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.
பள்ளிளிலும் கடைகளிலும் இனிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் தேர்தல் முடிவு கரும்பலகைகளில் எழுதப்பட்டு வருகிறது.
சில ஆட்டோக்களில் கூட டிரைவர்கள் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.
எங்கள் குடும்பத்தில் ஒருவர் ஜனாதிபதியாகிவிட்டதாக நினைக்கிறோம் என கலாம் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரான பால் போஸ்கூறினார்.
கலாமின் அண்ணன் மரைக்காயர் கூறுகையில், கலாம் ஜனாதிபதியாவதால் நாட்டுக்கு நல்லது நடந்தால் போதும். எங்களுக்கு எதுவும்வேண்டாம். இப்போது இருப்பது போலத் தான் நாங்கள் கலாம் ஜனாதிபதியானாலும் இருக்கப் போகிறோம் என்றார்.
சமீபத்தில் கலாம் சிறிது காலம் பேராசிரியாகப் பணியாற்றிய சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் இனிப்பு வழங்கிகொண்டாடி வருகின்றனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications