போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய 3 இலங்கை தமிழர்கள் கைது
சென்னை:
போலி பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்தி கொழும்புக்குச் செல்ல முயன்ற 2 பெண்கள் உள்பட 3 இலங்கைத்தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை-மட்டக்களப்பைச் சேர்ந்த மணீசுவரன் (31), முல்லைத் தீவைச் சேர்ந்த சதீஷ்குமாரின் மனைவி சுசிதா (28)மற்றும் அவருடைய மகள் ஷோபா (2) ஆகிய மூன்று பேரும் இந்தியா வந்திருந்தனர்.
மூன்று மாத சுற்றுலா விசாவில் வந்திருந்த அவர்கள் அந்தக் காலத்திற்கும் மேலாகவே தங்கியிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் மூவரும் திருச்சி விமானம் மூலம் கொழும்பு செல்ல முயன்றனர். அப்போதுஅவர்களுடைய பாஸ்போர்ட்டுகளைப் பரிசோதித்த போது அவை போலி பாஸ்போர்ட்டுகள் என்பது தெரியவந்தது.
மற்றவர்களின் பாஸ்போர்ட்டுகளில் தங்களுடைய புகைப்படங்களை ஒட்டி ஏமாற்றிய விவரமும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களைப் போலீசார் கைது செய்தனர். அவர்களைப் பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
போதைப் பொருள் - 3 இலங்கை நபர்கள் கைது:
இதற்கிடையே சென்னையில் போதைப் பொருள்களை வைத்திருந்த 3 இலங்கை நபர்கள் உள்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இலங்கையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் (26), ஷியாம் (20) மற்றும் முகமது ஆசாத் (42) மற்றும் சென்னையைச்சேர்ந்த லட்சுமி (63) ஆகிய நான்கு பேரையும் பாரிமுனை மூர் தெருவில் வடசென்னை கடற்கரைப் போலீசார் கைதுசெய்தனர்.
அவர்களிடமிருந்து ஏராளமான பிரவுன் சுகர் என்ற போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட இலங்கை நபர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்தவிதமான முக்கிய ஆவணங்களும்இல்லை. அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications