போலி டீத்தூள் தயாரித்து விற்ற 7 பேர் கைது
சென்னை:
பிரபல டீ நிறுவனங்களின் பெயரிலேயே போலி டீத்தூளைத் தயாரித்து விற்று வந்த 7 பேரை சென்னையில்போலீசார் கைது செய்தனர். ரூ.6 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ போலி டீத்தூளையும் போலீசார் கைப்பற்றினர்.
சென்னையில் த்ரீ ரோசஸ், ப்ரூக் பாண்ட், ஏ1 டஸ்ட் ஆகிய பிரபல டீ நிறுவனங்களின் பெயரில் போலி டீத்தூள்விற்கப்படுவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சென்னை-கொடுங்கையூர் பகுதியில் உள்ள "சன் டீத்தூள் தயாரிப்பு தொழிற்சாலை"யில்போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது தான் அங்கு பிரபல டீ தயாரிப்பு நிறுவனங்களின் பெயர் கொண்ட பாக்கெட்டுகளில் போலி டீத்தூள்அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுவதைப் போலீசார் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக அந்தத் தொழிற்சாலையை நடத்தி வந்த முன்னாள் ராணுவ வீரரான சுகிர்தராஜா என்பவர் உள்பட7 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
அங்கிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ போலி டீத்தூளையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் அந்தத்தொழிற்சாலையைப் போலீசார் சீல் வைத்துப் பூட்டினர்.
டீத்தூளுக்குப் பதிலாக மரத்தூளையும் மலிவு விலையில் வாங்கப்பட்ட டீத்தூளையும் தான் அவர்கள்பயன்படுத்தியது பின்னர் நடந்த சோதனையின் போது தெரிய வந்தது.
மேலும் கடந்த 2 ஆண்டுகளாகவே இந்தத் தொழிற்சாலை போலி டீத்தூளை இது போன்று பிரபல நிறுவனங்களின்பெயர் கொண்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொடுங்கையூர் போலீசார் இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications