வைகோ கைதால் மக்கள் அதிருப்தியா? - "சர்வே" நடத்துகிறது தமிழக அரசு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது குறித்து தமிழக மக்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளார்களாஎன்பதை அறிய உளவுத்துறை மூலம் கருத்துக் கணிப்புக்களை நடத்த ஆரம்பித்துள்ளது ஆளும் அதிமுக அரசு.
ஸ்டாலினின் மேயர் பதவி பறிப்பு, காவிரி நீர் பிரச்சனை ஆகியவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே வைகோ கைது நாடகத்தை ஆளும் அதிமுக அரசு அரங்கேற்றியுள்ளதாக காங்கிரஸ் தவிரஅனைத்து எதிர்க் கட்சிகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
பொதுமக்களும் வைகோ கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்தே பரவலாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
மத்திய அரசில் ஏற்படும் நெருக்கடியான சிக்கல்களைத் தீர்த்து வைப்பதில் அவ்வப்போது வைகோ உதவியுள்ளார்.
அவ்வளவு ஏன்? தமிழகத்தில் சமீபத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியார் மயமாக்குவது தொடர்பாகபிரச்சனை எழுந்த போது பிரதமர் வாஜ்பாயுடன் பேசி, அந்நிறுவனம் தனியார்மயமாக்கப்படுவதைத் தவிர்த்தார்வைகோ.
மேலும் தமிழர்களின் நல்வாழ்வுக்காகத் தான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகக் கூட வைகோ பேசி வருகிறார்என்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
இதையடுத்து சோர்ந்து போய்க் கிடந்த மதிமுக கட்சி கூட வைகோ கைது செய்யப்பட்ட பிறகு சுதாரித்துஎழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மக்களிடையே தற்போது மிகவும் பாப்புலரான கட்சியாகவும் அதுஉருவெடுத்துள்ளது.
இதனால் மதிமுகவையே தடை செய்யும் அளவுக்குச் சிந்தித்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசு தற்போது மிகவும்கலங்கிப் போயுள்ளது.
இந்நிலையில் வைகோ கைது குறித்து தமிழக மக்கள் உண்மையிலேயே என்ன நினைக்கிறார்கள் என்று அறியவிரும்பியது தமிழக அரசு.
இதையடுத்து தனது உளவுத்துறை மூலமே இதுகுறித்த ஒரு கருத்துக் கணிப்பை தமிழக அரசுமேற்கொண்டிருக்கிறது.
பொடா சட்டம் குறித்து பொதுமக்களும் கல்லூரி மாணவ-மாணவிகளும் என்ன தெரிந்து வைத்துள்ளனர், இந்தச்சட்டத்தில் மாறுதல் செய்யலாமா, அப்படியென்றால் என்னென்ன மாதிரியான மாறுதல்கள், பொடா சட்டத்தின் கீழ்வைகோவைக் கைது செய்தது சரியா, தவறு என்றால் தமிழக அரசு மேற்கொண்டிருக்க வேண்டிய மாற்றுநடவடிக்கை என்ன என்பது போன்ற கேள்விகள் அந்தக் கருத்துக் கணிப்பில் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் அதிமுக ஆட்சிக்கு எதிராக இருக்குமானால் இனி வரும் இது போன்றபிரச்சனைகளின் போது தமிழக அரசு அடக்கியே வாசிக்கும் என்று தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications