வீரப்பனுக்கு ரூ.40 கோடி கொடுக்கப்பட்டதா? - கர்நாடகம் மறுப்பு
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக ரூ.40 கோடி வரை வீரப்பனுக்குக் கொடுக்கப்பட்டதாகக்கூறப்படுவதை கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனா கார்கே மறுத்துள்ளார்.
ராஜ்குமார் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள "நக்கீரன்"நிருபர் சிவசுப்பிரமணியத்தின் ஜாமீன் மனு மீது ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
அப்போது தமிழக அரசு வழக்கறிஞரான சங்கர நாராயணன் வாதாடிய போது, ராஜ்குமாரை மீட்பதற்காக ரூ.40கோடி வரை வீரப்பனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் இந்தத் தொகையில் ரூ.10 கோடியை ராஜ்குமாரின் மகன்களே "நக்கீரன்" ஆசிரியர் கோபால் மற்றும்சிவசுப்பிரமணியம் ஆகியோர் மூலம் கொடுத்து அனுப்பியதாகவும் சங்கர நாராயணன் கூறினார்.
அரசுத் தரப்பிலிருந்தே தெரிவிக்கப்பட்ட இந்த விவரங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் இதுகுறித்து நேற்று பெங்களூரில் கார்கேயிடம் நிருபர்கள் கேட்ட போது,
ஈரோடு நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் என்ன தெரிவித்தார் என்ற விவரம் எனக்குத் தெரியாது.
ஆனால் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக வீரப்பனுக்கு எந்தவிதமான பிணைத் தொகையும் வீரப்பனுக்குஅளிக்கப்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே கர்நாடக அரசு இதைத் தான் தெரிவித்து வருகிறது.
ஒரு கிரிமினலுக்கு எந்தக் கணக்கிலிருந்து ஒரு அரசு பணத்தை எடுத்து பிணைத் தொகையாகக் கொடுக்க முடியும்என்றார் கார்கே.












Click it and Unblock the Notifications