சென்னையில் சீட்டு கம்பெனி மோசடி: ரூ.1 கோடியுடன் தம்பதி தலைமறைவு
சென்னை:
சென்னையில் மற்றொரு சீட்டு கம்பெனி மக்களிடம் மோசடி செய்துள்ளது. இதை நடத்தி வந்த ஒரு தம்பதி ரூ.1கோடி பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டது.
கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் ஏராளமான நடுத்தர மக்கள் சீட்டுக் கம்பெனியில் முதலீடு செய்துஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
பல பிரபலமான சீட்டுக் கம்பெனிகள் கூட மக்களை ஏமாற்றி விட்டுக் கம்பியை நீட்டிய போதிலும், மக்கள்தொடர்ந்து இது போன்ற சீட்டுக் கம்பெனிகளில் பணத்தைப் போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் சக்தி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சீட்டு கம்பெனி ஒன்றை நடத்தி வந்தது. கடந்தசுமார் 20 ஆண்டுகளாக இந்தச் சீட்டுக் கம்பெனியில் மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
இவ்வளவு ஆண்டுகளாகத் தொடர்ந்து இருப்பதால் மக்களும் வெகு நம்பிக்கையுடன் இந்த சீட்டுக் கம்பெனியில்முதலீடு செய்வதற்குத் தயங்கவில்லை.
மாணிக்கம்-கஸ்தூரி என்ற தம்பதியர் தான் இந்த சீட்டுக் கம்பெனியை நடத்தி வந்தனர். இது வரை சுமார் 200 பேர்இந்தக் கம்பெனியில் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் சில சீட்டுக்களுக்கான முதிர்வுக் காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்டமக்கள் தங்கள் பணத்தைக் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் மாணிக்கம்-கஸ்தூரி தம்பதியோ இதோ, அதோ என்றுஇழுத்தடிக்க ஆரம்பித்தனர்.
ஏதோ ஒரு நம்பிக்கையில் சீட்டுப் போட்ட மக்களும் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அடிக்கடிஅந்தத் தம்பதியரிடம் சென்று பணம் கேட்டு அலைந்து கொண்டு தான் இருந்தனர்.
இந்நிலையில் சக்தி என்டர்பிரைசஸ் திடீரென மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பணத்தைப் போட்ட மக்கள்மாணிக்கம்-கஸ்தூரி தம்பதியரின் வீட்டுக்குச் சென்று பார்த்தனர்.
அங்கும் வீடு பூட்டிக் கிடந்தது. இதையடுத்து தான் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை மக்கள்உணர்ந்தனர். சில பேர் லட்சக் கணக்கில் முதலீடு செய்திருந்தனர்.
சுமார் ரூ.1 கோடி வரையிலான தொகையுடன் அந்தச் சீட்டுக் கம்பெனி தம்பதியர் தலைமறைவாகி விட்டனர்.
ஏமாந்த மக்கள் அனைவரும் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்று நேரில் புகார்தெரிவித்தனர். தலைமறைவாகியுள்ள அந்தத் தம்பதியரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications