வீரப்பனுக்கு பணம் தரவில்லை: கர்நாடக முதல்வர், ராஜ்குமார் மனைவி மறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கர்நாடகத்தில் மழை பெய்தால் தமிழகத்துக்கு உரிய நீரை வழங்குவோம் என கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறினார்.

கர்நாடகத்துக்குக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ. 900 கோடி கேட்டு பிரதமரைச் சந்திக்க டெல்லி வந்துள்ள கிருஷ்ணாநிருபர்களிடம் பேசுகையில்,

கேரள மாநிலத்தில் பெய்த நல்ல மழை காரணமாக கர்நடாகத்தில் உள்ள கபினி அணை நிரம்பியுள்ளது. அந்த நீர் தமிழகத்துக்குத்தரப்பட்டு வருகிறது. கர்நாடகத்தின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. ஆனால், காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் மழை இல்லை.

மழை பெய்யும்போது நிச்சயம் தமிழகத்துக்கு உரிய நீர் வழங்கப்பட்டுவிடும். தமிழகத்துடன் கர்நாடகம் சிறந்து முறையில்ஒத்துழைத்து வருகிறது.

நடிகர் ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு ரூ. 40 கோடி தரப்படவில்லை. இது குறித்து தமிழக அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில்கூறியது உண்மையில்லை என்றார் கிருஷ்ணா.

அதே போல வீரப்பனுக்குப் பணம் தரப்படவில்லை என கர்நாடக சட்டமன்றத்தில் அம் மாநில காவல்துறை அமைச்சர்மல்லிகார்ஜூன கார்கே இன்று மறுத்தார்.

ராஜ்குமாரின் மனைவி பர்வத்தம்மாவும் தனது குடும்பமோ அரசோ வீரப்பனுக்கு பணம் ஏதும் தரவில்லை என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+