வைகோ கைது: இலங்கையில் தமிழ் கட்சிகள் போராட்டம்
கொழும்பு:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைக் கைது செய்து சிறையிலடைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவைஎதிர்த்து இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் போராட்டம் நடத்தின.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக கடந்த 11ம் தேதி பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
வைகோ கைது சம்பவம் இலங்கையிலும் எதிரொலித்துள்ளது. தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் வைகோ கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து அங்குள்ள தமிழ்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பாக நேற்று பேரணி ஒன்றை நடத்தியது.அப்போது அதன் துணைத் தலைவரும் எம்.பியுமான ஜோசப் பரராஜசிங்கம் பேசுகையில்,
தமிழர்களுக்காகவும் அவர்களுடைய விடுதலைக்காகவும் போராடும் அமைப்பு தான் விடுதலைப்புலிகள் அமைப்புஎன்பதைப் புரிந்து கொண்டுள்ள ஒரு சில தலைவர்களில் வைகோவும் ஒருவர்.
இவ்வாறு தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசி வரும் வைகோவை தீவிரவாதத்திற்கு எதிரான பொடா சட்டத்தின் கீழ்கைது செய்திருப்பது உலகெங்கும் உள்ள தமிழர்களையே கேவலப்படுத்துவது போல உள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசி அவர்களுக்காக தமிழகத்தில் இருந்து கொண்டே போராடி வருபவர்வைகோ.
அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள தமிழக அரசை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழகத்தை ஆட்சி செய்யும் ஜெயலலிதா தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசி வரும் வைகோவைக் கைதுசெய்திருப்பதன் மூலம் இலங்கை இனப் பிரச்சனையில் சிறிது கூட தனக்கு அக்கறை இல்லை என்பதைநிரூபித்துள்ளார் என்றார் பரராஜசிங்கம்.
இந்தப் பேரணியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் வைகோவை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று கோஷம் எழுப்பிக் கொண்டே சென்றனர்.
ஜெயலலிதாவைத் தாக்கி எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட அட்டைகளையும் தமிழர்கள் ஏந்திக் கொண்டுபேரணியில் சென்றனர்.
மன்னாரிலும் இது போலவே ஒரு பேரணி நடைபெற்றது. மேலும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின்பல்வேறு பகுதிகளிலும் வைகோவை விடுதலை செய்யும் வரை போராட்டம் நடத்த பல்வேறு தமிழ் கட்சிகளும்அமைப்புகளும் முடிவு செய்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications