தமிழகத்தை இரண்டாக்கும் கோரிக்கை: விரைவில் விளக்கமளிப்பேன் - ராமதாஸ்
காஞ்சிபுரம்:
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தான் பேசியது குறித்து விரைவில் விரிவான விளக்கமளிக்கப்போவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் சமீபத்தில் நடந்த வன்னியர் சங்க வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய டாக்டர்ராமதாஸ், வன்னியர் ஒருவர் முதல்வராகும் வகையில் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூறினார்.
டாக்டர் ராமதாசின் இந்தப் பேச்சு தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த மாநாட்டின் போது அடையாளம் தெரியாத சிலரால் கத்தியார் குத்திக் கொல்லப்பட்டஅச்சையன் வீட்டுக்குச் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ராமதாஸ் ஆறுதல் கூறினார்.
அச்சையனின் மனைவிக்கு ரூ.50,000 உதவித் தொகையையும் வழங்கிய ராமதாஸ் பின்னர் நிருபர்களிடம்கூறியதாவது:
தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து வன்னியர் சங்க வாழ்வுரிமை மாநாட்டின் போது நான் பேசினேன்.
இது குறித்து விரைவில் நான் விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிடுவேன் என்றார் ராமதாஸ்.
தமிழகத்தில் கள்ளச் சாராயம் தாராளமாகக் கிடைக்கிறது என்றும் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications