காவல் நிலைய கற்பழிப்பு: போலீசாரை அடையாளம் காட்டிய பெண்கள்
வாணியம்பாடி:
வாணியம்பாடி காவல் நிலையத்தில் 4 பெண்கள் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில் நேற்று போலீசாரின் அடையாள அணி வகுப்பு நடந்தது.அப்போது தங்களை கற்பழித்த 2 போலீஸ்காரர்களை அந்தப் பெண்கள் அடையாளம் காட்டினர்.
கடந்த ஜனவரி மாதம் ஒரு திருட்டு வழக்குத் தொடர்பாக தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த எலச்சனூரைச் சேர்ந்த விஜயா,மணிமேகலை, சத்யா உள்ளிட்ட 4 பெண்களை வாணியம்பாடி காவல் நிலைய போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால், காவல் நிலையத்தில் வைத்து அவர்களை காவலர்கள் அடுத்தடுத்து கற்பழித்தனர். இதையடுத்து அந்தப் பெண்களின் உறவினர்கள்போராட்டத்தில் குதித்தனர். முதலில் இதை அரசு கண்டுகொள்ளவில்லை. போராட்டம் வலுத்ததால் காவல் நிலையத்தின் எஸ்.ஐ. உள்பட சிலகாவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
இது குறித்து கோட்டாட்சியாளரின் (ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. திருப்பத்தூர் நகர ஆர்.டி.ஓ. இது குறித்து விசாரணைநடத்தி வந்தார். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக நேற்று போலீசாரின் அடையாள அணி வகுப்பு நடந்தது. அப்போது இந்த நான்குபெண்களும் தங்களைக் கற்பழித்த 2 போலீசாரை அடையாளம் காட்டினர். இவர்களில் ஒரு காவரின் பெயர் சுப்பிரமணியன் என்றுகூறப்படுகிறது.
இதையடுத்து இந்தக் கற்பழிப்பு உறுதியாகியுள்ளதாக இவர்களுக்காக போராட்டம் நடத்தும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications