தமிழில் ராணுவ செய்திகள்: நாடாளுமன்றத்தில் அதிமுக கோரிக்கை
டெல்லி:
இந்திய பாதுகாப்புத்துறை குறித்த செய்தி இதழ்களை தமிழ் உள்ளிட்ட பிற மொழிளிலும் வெளியிட வேண்டும் என அதிமுகஎம்.பி. ஜோதி நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படையின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்புத்துறையின் பிற செயல்பாடுகள் குறித்தஇதழ்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் இன்று ராஜ்யசபா கூடியதும் கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக எம்.பியான ஜோதி, பாதுகாப்புத்துறைதொடர்பான பத்திரிக்கைகள், இதழ்களை தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் வெளியிட்டால் மக்களுக்கும் பாதுகாப்புத்துறைக்கும் இடையிலான உறவு வலுப்படும். அரசு இதைச் செய்யுமா என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னண்டஸ், பாதுகாப்புத்துறையில் இருந்து எந்த இதழும்வெளியிடப்படுவதில்லை. ஆனால், எங்கள் துறையின் பல்வேறு பிரிவுகள் இவற்றை வெளியிடுகின்றன. இவற்றை பிற இந்தியமொழிகளிலும் வெளியிடுவது குறித்து நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்றார்.
ஆனால், பெர்னாண்டசிடம் கேள்வி கேட்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் மறுத்துவிட்டனர். கேள்வி நேரத்தின்போதுபாதுகாப்புத்துறை தொடர்பான கேள்விகளைக் கேட்குமாறு ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்களையும் காங்கிரஸ்உறுப்பினர்களையும் பார்த்து சபாநாயகர் கிருஷ்ணகாந்த் கூறினார்.
ஆனால், தெகல்கா நிறுவனம் வெளியிட்ட கேசட்டின்படி பெர்னாண்டஸ் பாதுகாப்புத்துறையில் ஊழல் செய்திருப்பதுஉறுதியாகிறது. அவரை பாதுகாப்பு அமைச்சராக நாங்கள் ஏற்க மாட்டோம். அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டோம் எனஅக் கட்சி எம்.பிக்கள் பதில் கூறிவிட்டு தாங்கள் ஏற்கனவே கொடுத்த கேள்விகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தனர்.
இதையடுத்து பா.ஜ.க. எம்பிக்களுக்கும் எதிர்க் கட்சி எம்பிக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பாதுகாப்புத்துறை ஊழல் விவகாரம் வெடித்தபோது எதிர்க் கட்சியினர் செய்த ரகளையால் பெர்னாண்டஸ் பதவி விலகினார்.பின்னர் அவரை பிரதமர் வாஜ்பாய் மீண்டும் அமைச்சராக்கினார். அன்று முதல் பெர்னாண்டசை எதிர்க் கட்சிகள் தொடர்ந்துபுறக்கணித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications