ஹஜ் யாத்திரை: விண்ணப்பிக்க காலக்கெடு நீடிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

2003ம் ஆண்டு ஹஜ் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் அதற்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு வரும் 31ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் லட்சக்கணக்கான முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரை செல்வது வழக்கம்.

தமிழகத்திலிருந்து மட்டும் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணம்மேற்கொள்கின்றனர்.

அவர்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து தருகிறது. இதற்காக ஹஜ்செல்லும் ஒவ்வொருவரும் விண்ணப்பம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

அதன்படி 2003ம் ஆண்டு ஹஜ் யாத்திரை செல்ல விரும்புவோர் இந்த ஜூலை 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந் நிலையில் யாத்ரீகர்களின் வசதிக்காக அவர்கள் விண்ணப்பிக்கும் காலம் வரும் 31ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+