இந்திய- இலங்கை கடற்படைகள் மோதல்: ராமேஸ்வரத்தில் துணைத் தளபதி விசாரணை
ராமேஸ்வரம்:
இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி வருவது குறித்து இந்திய கடற்படையின் துணைத் தலைவர் வைஸ்அட்மிரல் ராமன் பூஜாரி ராமேஸ்வரம் சென்று நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த சில வாரங்களாக இந்திய மீனவர்களை நோக்கி சுடுவது, அவர்களது மீன்களை அள்ளிச் செல்வது, படகுகளை விரட்டுவது,இந்திய கடல் எல்லைக்குள் வந்து மீனவர்களைத் தாக்குவது போன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் ராமேஸ்வரம் கடல் எல்லையில் புகுந்த இலங்கை கடற்படையினரை நோக்கி இந்திய கடற்படை சுட்டது.இதையடுத்து அவர்கள் தப்பியோடினர்.
இது குறித்து விசாரணை நடத்த ராமன் பூஜாரி நேற்று ராமேஸ்வரம் வந்தார். வந்தவுடன் சர்வதேச கடல் எல்லைப் பகுதிக்கு நேரில்சென்ற அவர் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் தனுஷ்கோடி, நரிக்குழி ஆகிய தீவுகளுக்குச் சென்று பார்வையிட்டார். இன்று இந்திய கடற்படை மற்றும் கடலோரக்காவல்படையினரிடம் அவர் விசாரணை நடத்தினார்.
இலங்கையில் இருந்து தப்பி அகதிகளாக வரும் தமிழர்களை நடுக் கடலில் இலங்கை மீனவர்கள் இறக்கிவிடுவது போன்றவிவகாரங்கள் குறித்தும், இந்திய கடல் எல்லைக்குள் எந்த அன்னிய நாட்டுப் படகும் நுழையாமல் தடுப்பது குறித்தும் அவர்ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications