பாரம்பரிய உடையில் கலாம்
டெல்லி:
ஜனாதிபதிகள் அணியும் பாரம்பரிய உடையான பந்த்காலா ரக உடையை பல தரப்பு நிர்பந்தம் காரணமாக டாக்டர் அப்துல் கலாம்அணிந்தார்.
முதலில் கோர்ட், டை, சூட்டிலேயே பதவியேற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், ஜனாதிபதிக்கான உடையை அணியவேண்டும் என அவருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த ரக உடையை அணிய கலாம் ஒப்புக் கொண்டார். உடனே அவருக்குப் பிடித்தமான பல வண்ணங்களில் அந்த உடைகள்தைக்கப்பட்டன.
தனது டிரேட் மார்க்கான டார்க் புளூ கலர் உடையை அணிந்து இன்று காலை 9 மணிக்கு தனது ஆசியாட் வில்லேஜ் வீட்டிலிருந்து(டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் இல்லம்) கிளம்பினார். வழக்கமாக அவர் பயன்படுத்தும் புல்லட் புரூப் அம்பாசிடர் காருக்குப் பதிலாக அவரைஅழைத்துச் செல்ல ஜனாதிபதி மாளிகைக்குச் சொந்தமான கருப்பு மெர்சிடீஸ் பென்ஸ் கார் வந்தது.
அவரது அண்டை வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வந்து நின்று கலாமை நோக்கி கையசைத்தனர். அவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்கையசைத்து வணக்கம் சொன்ன கலாம் அங்கிருந்து கிளம்பினார். கடந்த 3 வருடங்களாக இந்த வீட்டில் தங்கியிருந்த கலாம் அக்கம்பக்கத்துமக்களுடன் மிக நெருங்கிப் பழகினார்.
இன்று அவர் வீட்டைக் காலி செய்துவிட்டு ஜனாதிபதி மாளிகையில் குடியேறுவது தங்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி தந்தாலும் இன்னொருபுறம் பெரும் இழப்பை அனுபவிப்பது போல உள்ளதாக அவரது பக்கத்து வீட்டுக்காரரான பன்சால் மற்றும் அவரது மனைவி அனிதாஆகியோர் நிருபர்களிடம் கூறினர்.
தினமும் காலையில் வாக் செல்லும்போது எதிரில் வருபவர்களுக்கு ஹலோ சொல்ல கலாம் தவறுவதில்லை. எங்களக்கு முதல் குட் மார்னிக்கலாமிடம் இருந்து தான் கிடைத்து வந்தது. ஒரு நல்ல மனிதரின் அன்னோன்யத்தை இழந்துவிட்டோம் என்றார் பன்சால்.
பதவியேற்கச் செல்லும்போது காலையில் அவர் என்ன சாப்பிட்டார் என அவரது வேலையாளிடம் கேட்டபோது, ஒரு ரொட்டி, கீரை, தயிர்,ஊறுகாய், ஒரு துண்டு பப்பாளிப் பழம், 2 துண்டு மாம்பழம். வழக்கமாகவே அவர் உணவில் கவனம் செலுத்தவே மாட்டார் என்றார்.
தீவிரவாதிகளின் ஹிட்-லிஸ்ட் மற்றும் பாகிஸ்தானின் வயிற்றெரிச்சலில் முதலிடத்தில் இருப்பவர் கலாம். இதனால், அவருக்கு இந்த வீட்டில்மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. புல்லட் புரூப் காரைத் தான் அவர் பயன்படுத்தி வந்தார். ஜனாதிபதி பதவிக்கு அவரது பெயர்அறிவிக்கப்பட்டவுடன் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கடந்த ஒரு மாதமாக அவரது வீட்டைச் சுற்றி 400 பாதுகாப்புப் படையினர் எந்த நேரமும் பாதுகாப்பில் ஈடுபட்டிந்தனர். டெல்லி போலீஸ்,பஞ்சாப் போலீஸ், ராஜஸ்தான் ரிசர்வ் போலீஸ், மத்திய ரிசர்வ் பேலீஸ் படையினர் இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்தப் பாதுகாப்பினால் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு எந்தத் தொல்லையும் வரக் கூடாது என அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாராம் கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications