திருச்சி கல்லூரியில் ராகிங்: தட்டிக் கேட்ட மாணவன் குத்திக் கொலை
திருச்சி:
திருச்சி பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில் ராகிங் செய்யப்பட்ட மாணவனுக்கு ஆதரவாகப் பேசச் சென்ற அண்ணனை கூலிப் படையினர்குத்திக் கொன்றனர்.
காஜாமலையில் உள்ள இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று தான் வகுப்புகள் தொடங்கின. முதல் நாள் கல்லூரிக்குவந்த அவர்களை இரண்டாம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் சில மாணவர்கள் ராகிங் செய்தனர். புதிய மாணவிகளிடம் மிகஅநாகரீகமாக நடந்து கொண்டனர் இந்த எருமை மாடுகள்.
இந்தக் கும்பலுக்கு 3ம் ஆண்டு கணிதம் படிக்கும் ஆறுமுகம் என்ற மாணவன் தலைமை வகித்தான். இந்தக் கும்பலிடம் ரமேஷ் என்ற புதியமாணவன் மாட்டிக் கொண்டான். அவனை பேண்டைக் கழற்றச் சொல்லி இந்தக் கும்பல் அடாவடி செய்தது. அப்போது ரமேஷ், என்அண்ணன் அழகர்சாமியும் இதே கல்லூரியில் தான் 3ம் ஆண்டு படிக்கிறார் என்று கூறியுள்ளான்.
உடனே உன் அண்ணன் என்ன பெரிய கொம்பா? என்று கேட்ட ஆறுமுகம் அந்த மாணவனை அடித்தான்.
இது குறித்து ரமேஷ் தனதுஅண்ணன் அழகர்சாமியிடம் போய் கூறியுள்ளார். உடனே அழகர்சாமி தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன்ஆறுமுகத்திடம் வந்தார். ஏன் இப்படி ராகிங் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இந்தப் பிரச்சனையை வெளியில் போய் பேசலாம் என்று கூறிய ஆறுமுகம் கோஷ்டி அவர்களை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கவெளியே வந்தது. அங்கு அழகர்சாமிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது. இருவரும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தபோதே ஆறுமுகம் தனது கும்பலில் சிலரின் காதில் ஏதோ சொன்னான்.
உடனே அவர்கள் பைக்குகளில் அங்கிருந்து வேகமாக சென்றனர். சென்ற சிறிது நேரத்தில் ஒரு கூலிக் கும்பலை அவர்கள் அழைத்துவந்தனர். இந்த அடாவடிக் கும்பலைப் பார்த்தவுடன் அழகர்சாமியுடன் வந்த பிற மாணவர்கள் பயந்து போய் பின் வாங்கிவிட்டனர்.
கூலி ஆட்கள் அழகர்சாமியை தாக்கினர். பின்னர் அவர்கள் அழகர்சாமியை பிடித்துக் கொள்ள அவரை ஆறுமுகம் கத்தியால் சரமாறியாகக்குத்தினான். நெஞ்சிலும் வயிற்றிலும் பல குத்துகள் வாங்கிய அழகர்சாமியை தூக்கி வீசிவிட்டு ஆறுமுகம் அந்த ரெளடிக் கும்பலுடன்தப்பிவிட்டான்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அழகர்சாமியை அவரது வகுப்பு மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தால் கல்லூரிக்கும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முதலாமாண்டு மாணவ- மாணவிகள் உடனடியாக கல்லூரியைவிட்டுவெளியேறினர். இந்தச் சம்பவத்தயடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகத்துக்கும் அழகர்சாமிக்கும் இடையே கல்லூரி மாணவர் தேர்தலில் முன் விரோதம் இருந்து வந்தது.
இதனால் தான் அழகர்சாமியின் தம்பி என்று தெரிந்தும் ரமேஷ் என்ற மாணவனை வேண்டும் என்றே வம்புக்கு இழுத்துள்ளான் ஆறுமுகம்.பிரச்சனை வெடிக்கும் என்று தெரிந்தே அவன் கத்தியுடன் கல்லூரிக்கு வந்துள்ளார்.
அதே நேரத்தில் தமிழகத்தில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளில் அடியாட்கள் நுழைவது, கஞ்சாவியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் போன்ற சம்பந்தமே இல்லாத ஆட்கள் தலையிடுவது போன்றவை அதிகரித்து வருகிறது. இந்தவிவகாரத்திலும் வெளியாட்கள் வந்த பின்னர் தான் வாக்குவாதம் முற்றி கத்திக் குத்தில் போய் முடிந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications