அந்தமானில் எனக்கு எந்தச் சொத்தும் இல்லை: ஸ்டாலின் மறுப்பு
திருச்சி:
அந்தமானில் மட்டுமல்ல சந்திர மண்டலத்தில் போய் கூட எனக்கு சொத்து இருக்கிறதா என தமிழக அரசு சோதனை நடத்தும் என திமுகஇளைஞரணித் தலைவரும் முன்னாள் மேயருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
ஸ்டாலினுக்கு அந்தமானில் சொத்துக்கள் இருப்பதாகக் கூறியுள்ள லஞ்ச- ஒழிப்புப் போலீசார் அங்கு சென்று விசாரணையும் நடத்திவிட்டுத்திரும்பியுள்ளனர்.
இந் நிலையில் இன்று திருச்சி வந்த ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில்,
இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு. எனக்கு அந்தமானில் எந்தச் சொத்தும் கிடையாது. அந்தமான் மட்டுமல்ல சந்திர மண்டலத்தில் கூடலஞ்ச-ஒழிப்புப் போலீசாரைக் கொண்டு தமிழக அரசு விசாரணை நடத்தும்.
ஏற்கனவே, சிங்கப்பூர் உள்பட பல நாடுகளில் சென்று எனக்கு சொத்து உள்ளதா என்று சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இப்போது அந்தமான் சென்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இந்தச் செய்தியை வெளியிட்டவர்கள், பத்திரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமையுடன் பேசி முடிவெடுப்பேன்.
என் மீது எந்த வழக்குத் தொடர்ந்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக உள்ளேன்.
இந்தச் செய்தியை வெளியிட்டவர்கள், பத்திரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமையுடன் பேசி முடிவெடுப்பேன்.
தமிழக மக்களையும், விவசாயிகள், வர்த்தகர்கள், அரசு ஊழியர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பொடா சட்டத்தைப் பயன்படுத்திஅரசியல் கட்சித் தலைவர்களையும் பிறரையும் அரசு கைது செய்து வருகிறது.
வைகோவைத் தொடர்ந்து ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் ஆகியோரையும் கைது செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் அசுர பலம் இருப்பதால் ஜெயலலிதா தமிழகத்தில் துக்ளக் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என்றார் ஸ்டாலின்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications