குஜராத்தில் ஜனாதிபதி ஆட்சி இல்லை: பா.ஜ.க. உறுதி
சென்னை:
குஜராத்தில் தேர்தல் நடத்துவதற்கு முன் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின்கோரிக்கையை பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தன்னுடைய அமைச்சரவையைக் கலைத்து விட்டு தன்னுடைய பதவியையும்ராஜினாமா செய்து விட்டார். மேலும் அங்கு உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
அங்கு தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் பா.ஜ.கவுக்குத் தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால்உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனை அக்கட்சி நெருக்கி வருகிறது.
ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குஜராத்தில்ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்றும் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிஎதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் வெங்கையா நாயுடு பேசுகையில்,
குஜராத் அமைச்சரவை கலைக்கப்பட்டதுடன் அம்மாநில மோடியும் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.மேலும் அங்கு வன்முறை முழுவதுமாக ஓய்ந்து முழு அமைதி திரும்பி விட்டது.
எனவே குஜராத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கவில்லை.
ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்து தான் தீர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் எதிர்க் கட்சிகள்இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வரசம்மதிக்கட்டுமே?
அடுத்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன் அங்கு ஜனாதிபதிஆட்சியைக் கொண்டு வர அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு சம்மதிக்குமா?
மேலும் குஜராத்தில் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் எப்போதுமே தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு முன் குஜராத்தில் வன்முறை தாண்டவமாடிக் கொண்டிருந்த போது மோடி ராஜினாமா செய்துஅங்கு தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் இப்போதோதேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று அவை கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.
அதனால் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோருவதில் எந்தவிதமான நியாயமும்இல்லை.
மோடி அமைச்சரவையின் ராஜினாமாவை குஜராத் ஆளுநரே ஏற்றுக் கொண்டுள்ள சூழ்நிலையில் தற்போதுஉடனடியாக அங்கு தேர்தல் நடத்துவதைத் தவிர தேர்தல் கமிஷனுக்கும் வேறு வழி இல்லை என்றார் வெங்கையாநாயுடு.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications