சென்னை துறைமுகத்தில் கப்பல்களில் கொள்ளையடித்த 6 பேர் கைது
சென்னை:
சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்படும் வெளிநாட்டு சரக்குக் கப்பல்களில் அடிக்கடி கொள்ளையடித்து வந்த 6கொள்ளையர்களைப் போலீசார் துப்பாக்கிச் சண்டை போட்டு மடக்கிப் பிடித்தனர்.
சென்னை துறைமுகத்திற்கு வரும் வெளிநாட்டு சரக்குக் கப்பல்களிலிருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டஏராளமான பொருட்கள் அடிக்கடி கொள்ளையடிக்கப்பட்டு வந்தன.
தனியாக ஒரு விசைப்படகில் வரும் சிலர் இந்தக் கொள்ளைகளை நடத்தி வருவதாகப் போலீசாருக்குத் தகவல்கிடைத்தது.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த "குக்ஸ்" என்ற சரக்குக் கப்பல் சென்னை துறைமுகத்தில்நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலிலிருந்து பெயிண்ட் டின்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பட்டு நூல் உள்ளிட்ட பல பொருட்களும்கொள்ளையடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்தக் கடற்கொள்ளையர்களைப் பிடிக்க தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது. சென்னைமாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் உத்தரவின் பேரில் இணை கமிஷனர் சைலேந்திர பாபு மற்றும் துணைகமிஷனர் மவுரியா ஆகியோரின் மேற்பார்வையில் ஒரு போலீஸ் படை கொள்ளையர்களைப் பிடிக்கஅனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து தனிப் படை போலீசார் ஒரு விசைப்படகில் சென்று கொள்ளையர்களைப் பிடிப்பதற்கானரோந்துப் பணியில் நேற்று ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் இன்னொரு விசைப்படகில் கொள்ளையர்கள் சென்று கொண்டிருப்பதைப் போலீசார் பார்த்தனர்.உடனே அவர்களைச் சரணடையும் படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் சரணடைய மறுத்த கொள்ளையர்கள் போலீசார் மீது இரும்புக் கம்பிகளையும் கட்டைகளையும் வீசித்தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து கொள்ளையர்களின் படகை நோக்கி போலீசார் 3 ரவுண்டுகள் வரை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்பயந்து போன கொள்ளையர்கள் தங்களுடைய ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு போலீசாரிடம்சரணடைந்தனர்.
இதைத் தொடர்ந்து காசிமேட்டைச் சேர்ந்த ரமேஷ் (28), அருள் (20), ரகு (19), மாயகிருஷ்ணன் (20), சரவணன்(23) மற்றும் கந்தசாமி (35) ஆகிய ஆறு கொள்ளையர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இந்தக் கொள்ளையர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருள்களையும் போலீசார் மீட்டனர்.
கப்பல்களில் கொள்ளை நடைபெறுவதைத் தவிர்க்க போலீசார் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications