கார்கில் வெற்றி தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
டெல்லி:
கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தினரையும், ஆப்கான் கூலிப் படையினரையும் இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிர் தந்துவிரட்டியடித்த கார்கில் வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் உணர்ச்சிமயமாய் கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 1999ம் ஆண்டில் காஷ்மீர் எல்லையில் கார்கில் பகுதியை தீவிரவாதிகள் மூலம் கைப்பற்றியது பாகிஸ்தான். ஆப்கானிஸ்தானின்தலிபான் தீவிரவாதிகள், பாகிஸ்தான் ராணுவத்தினர், ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-ஏ-தொய்பா போன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தப்பகுதியில் ஊடுருவினர்.
இவர்களை விரட்டியடிக்க இந்திய ராணவம் பெரும் தாக்குதல் நடத்தியது. பல வாரங்கள் தொடர்ந்த இந்தச் சண்டையில் ஆயிரக்கணக்கானஇந்திய வீரர்கள் பலியாயினர்.
இந்த வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று இரவு மெழுகுவர்த்திகள் ஏந்தியஊர்வலங்கள் நடந்தன.
இன்று காலை சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் தென் பிராந்திய ராணுவத் தலைவர் ஜாம்பால் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில்இறந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்பாலின் மனைவி அர்ச்சனா கார்கில் போரில் உயிரிழந்த 38 வீரர்களின் மனைவிகளுக்கு அரசின் நிதியுதவியை வழங்கினார்.
கோவை அவினாசிலிங்கம் கல்லூரியில் என்.சி.சி. மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்திகளை ஏற்றி உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலிசெலுத்தினர்.
பாண்டிச்சேரியில் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கார்கில் வீரர்கள் நினைவிடத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், பிராந்தியராணுவ அதிகாரிகள், போலீசார் ஆகியோர் மறைந்த 4 பாண்டிச்சேரி வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தென் மண்டல கடற்படைத் தலைமையகமான கொச்சி கடற்படைத் தளத்திலும் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ராணுவ, கடற்படை, விமானப் படை பயிற்சி மையங்கள், தளங்கள், அலுவலகங்களில் இந்த அஞ்சலிநிகழ்ச்சி நடந்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications