பாப்பாபட்டி, கீரிப்பட்டிக்கு அக்டோபரில் இடைத் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட 69 பஞ்சாயத்துக்களுக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்றுதமிழக தேர்தல் கமிஷனர் வை. பழனிச்சாமி கூறினார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள பாப்பாபட்டி, கீரிப்பட்டி மற்றும் நாட்டார்மங்கலம் ஆகிய தலித் பஞ்சாயத்துத்தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

ஆனால் பாப்பாபட்டி மற்றும் கீரிப்பட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களை சில உயர்ஜாதியினர் மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தனர்.

இதையடுத்து அவ்விரு தொகுதிகளும் தற்போது காலியாகத் தான் உள்ளன. இவற்றைத் தவிர மேலும் 64சிற்றூராட்சித் தொகுதிகளும் 3 பேரூராட்சித் தொகுதிகளும் காலியாக உள்ளன.

காலியாகவுள்ள இந்தத் ஊராட்சித் தொகுதிகளில் தேர்தல் நடத்துவதுகுறித்து இன்று மதுரையில் நிருபர்களிடம்பழனிச்சாமி கூறியதாவது:

பாப்பாபட்டி மற்றும் கீரிப்பட்டி உள்ளிட்ட 66 சிற்றூராட்சித் தொகுதிகளிலும் 3 பேரூராட்சித் தொகுதிகளிலும்தேர்தல் நடக்க வேண்டியுள்ளது.

அந்தத் தொகுதிகளில் வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் செலவுக் கணக்கைக் காட்டாத 8,863 வேட்பாளர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்குப்போட்டியட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார் பழனிச்சாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+