திடீரென்று முளைத்த புலிகள் ஆதரவு போஸ்டர்கள்: திருச்சியில் பரபரப்பு
திருச்சி:
திருச்சி நகரின் பல இடங்களிலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சிலபகுதிகளில் சுவர்களில் புலிகளை ஆதரித்து சுவர் விளம்பரங்களும் எழுதப்பட்டுள்ளன.
புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில்அடைக்கப்பட்டு 15 நாட்களே ஆன நிலையில் திடீரென்று முளைத்துள்ள இந்த போஸ்டர்கள் திருச்சியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தப் போஸ்டர்களை ஒட்டியவர்கள் குறித்தோ விளம்பரங்களை எழுதியவர்கள் குறித்தோ எந்தவிதமானதகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
புலிகளுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று நேற்றுதான் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இந்நிலையில் திருச்சியில் திடீரென்று முளைத்துள்ள புலிகள் ஆதரவு போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்களால்போலீசார் கடுப்பாகியுள்ளனர்.
இதையடுத்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போஸ்டர்கள் ஒட்டியவர்களையும் விளம்பரங்கள்எழுதியவர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நெடுமாறன், திருமாவளவன் மீது நடவடிக்கை?
இதற்கிடையே கடந்த வாரம் உலகத் தமிழர் மாநாட்டுப் பேரவை தொடக்க விழாவின் போது புலிகளுக்குஆதரவாகப் பேசியவர்கள் பற்றி தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக நேற்று ஜெயலலிதா கூறினார்.
அந்த விழாவில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர்திருமாவளவன் ஆகியோர் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது என்று கூறியஜெயலலிதா, அவர்களுடைய பேச்சுக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் முடிந்தால் அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு தயங்காது என்றும் கூறினார்.
இந்நிலையில் இதுகுறித்து திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
நாங்கள் புலிகளை ஆதரித்துப் பேசுவதாலேயே அவர்களுக்கு எதுவும் கிடைத்து விடப் போவதில்லை. மேலும்புலிகளுக்காக நாங்கள் நிதி வசூலிப்பதிலோ அல்லது அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதிலோ ஈடுபடவில்லைஎன்று கூறினார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications