அம்பானிகளைவிட நான் கேவலமா?: மத்திய அரசுக்கு ஜெ. கடும் கண்டனம்
சென்னை:
நேற்று டெல்லியில் நடந்த ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய அரசிடம் இருந்து தனக்கு முறையான அழைப்புவரவில்லை என முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
நான் வேண்டுமென்றே டாக்டர் அப்துல் கலாமின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தாக குற்றம் சாட்டி சிலசெய்திகள் வந்துள்ளன. இது மிகத் தவறான செய்தியாகும்.
உண்மையைச் சொன்னால் ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பிதழே வரவில்லை. ஜனாதபதிபதவியேற்பு நிகழ்ச்சியின் நேரம் மற்றும் இடம் குறித்து டெல்லியில் உள்ள தமிழக அரசின் ஆணையர், உள்துறை அமைச்சகத்தைத் தொடர்புகொண்டு விசாரித்தார்.
அப்போது ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று உள்துறைஅமைச்சகத்திடம் இருந்து முகத்தில் அடித்தார்போல பதில் கிடைத்து.
ஆனால், ஜனாதிபதி தேர்தலின்போது தாங்கள் நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு பிரதமரும் துணைப் பிரதமரும் பலமுறைஎன்னிடம் பேசினர். நான் அவர்கள் நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தேன். அதே போல துணை ஜனாதிபதி தேர்தலிலும் தங்கள்வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பிரதமர், துணைப் பிரதமர் இருவரும் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். நானும் ஆதரவு தருவதாககூறியிருக்கிறேன். ஜனாதிபதி தேர்தலில் என் கட்சியின் ஆதரவு மிக முக்கியமானதாக இருந்தது.
ஆனால், ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் எனக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்துள்ளனர். ஆதரவு மட்டும் வேண்டும், அதேநேரத்தில் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு மரியாதைக்குக் கூட கூப்பிடவில்லை.
ஆனால், வேறு சில முதல்வர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளனர். ஏன் முதல்வர்களை இப்படிப் பிரித்துப் பார்க்க வேண்டும்.இந்தியாவில் 35 முதல்வர் தான் உள்ளனர். கூப்பிட்டால் அனைவரையும் கூப்பிட வேண்டியது தானே. அதைவிட்டுவிட்டு இதில் என்னசிலருக்கு மட்டும் அழைப்பு விடுப்பது? ஆந்திரா, ராஜஸ்தான், ஜம்மூ-காஷ்மீர் முதல்வர்களுக்கும் அழைப்பு விடுத்துவிட்டு என்னைப்போன்ற பிற முதல்வர்களை எப்படி புறக்கணிக்கலாம்?
இந்தச் செயல் மூலம் தமிழக மக்களை மத்திய அரசு அவமானப்படுத்தியுள்ளது. அதை விடக் கேவலம் முதல்வரான என்னைபுறக்கணித்துவிட்டு அம்பானி சகோதரர்கள் போன்ற தொழிலதிபர்களுக்கு அழைத்து விடுத்தது. அம்பானிகளை விட மாநில முதல்வர் எந்தவிஷயத்தில் குறைந்தவர்.
அம்பானி சகோதரர்கள் இந்த நாட்டுக்கு என்ன செய்துவிட்டார்கள்? தங்கள் சொத்தையும் குடும்பச் சொத்தையும் அதிகரித்துக்கொண்டார்களே தவிர அவர்கள் நாட்டுக்கு என்ன செய்தார்கள்?
மாநில முதல்வர்களான நாங்கள் பொது வாழ்க்கைக்காக எங்களையே அர்ப்பணிக்கிறோம். ஆனால், எங்களைவிட அம்பானிகள் மத்தியஅரசுக்கு மிக முக்கியமானவர்களாகிவிட்டனர்.
பணக்கார மனிதரின் மகன்கள் என்பதைத் தவிர அம்பானி சகோதரர்கள் எந்த வகையில் பெரியவர்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டநாங்கள் தான் ஜனாதிபதியைத் தேர்வு செய்கிறோம். ஆனால், எங்களைப் புறக்கணித்துவிட்டு அம்பானிகளுக்கு என்ன அளவுக்குமுக்கியத்துவம்?
தமிழகத்தில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாகிறார் என்பதால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் மிக ஆர்வமாக இருந்தேன். ஆனால்,என்னைப் புறக்கணித்து தமிழக மக்களை கேவலப்படுத்தியிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. இதை நியாயம் தெரிந்த யாரும் கண்டிக்காமல்இருக்க மாட்டார்கள்.
1992ம் ஆண்டில் சங்கர்தயாள் சர்மாவை ஜனாதிபதியாக தேர்தலில் நிறுத்தியபோது அவரைது பெயரை முன்மொழிந்தவர்களில் நானும்ஒருவர். ஆனால், அப்போதைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ், ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கும் பிற முதல்வர்களுக்கும்அழைப்பு விடுக்கவில்லை.
மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. என எந்தக் கட்சியினர் ஆட்சிக்கு வந்தாலும் மாநில முதல்வர்களை மதிப்பதில்லை என்பதை இந்தச் சம்பவம்மீண்டும் நிரூபித்துள்ளது.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications