உக்ரைன்: கண்காட்சியில் விமானம் நொறுங்கி 83 பேர் பலி
கீவ்:
உக்ரைனில் நடந்த ஒரு விமான சாகசக் கண்காட்சியின் போது "சுகாய்" ரக போர் விமானம் ஒன்று நொறுங்கிபார்வையாளர்கள் மத்தியில் விழுந்ததில் 83 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு உக்ரைனில் எல்விவ் நகருக்கு அருகே உள்ள ஸ்க்னி லிவ் என்ற இடத்தில் இந்த விமான சாகசக் கண்காட்சிநேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த சாகசக் கண்காட்சியைக் காண நூற்றுக்கணக்கான மக்களும் திரண்டு நின்று கொண்டிருந்தனர்.
"சுகாய் சூ-27" என்ற போர் விமானம் வானத்தில் அற்புதமாக டைவ் அடித்து சாகசம் செய்து கொண்டிருந்தது.அப்போது திடீரென்று அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து வேகமாகத் தரையை நோக்கிப் பாய்ந்தது.
தரையில் வந்து வேகமாக மோதிய விமானம் அதே வேகத்தில் பல நூறு மீட்டர்கள் வரை இழுத்துச் செல்லப்பட்டது.இதனால் ஒரு பகுதியில் விமான சாகச நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களின் மீதும் அந்த விமானம்பாய்ந்தது.
கூட்டத்தில் பாய்ந்த விமானம் வெடித்து தீப்பிடித்துச் சிதறியது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
இந்தப் பயங்கரமான விபத்தில் 19 குழந்தைகள் உள்பட 83 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பலமீட்டர் சுற்றளவிற்குச் சிதறிக் கிடந்தன.
மேலும் 116 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேரின் நிலைகவலைக்கிடமாக உள்ளது.
இந்தக் கோரச் சம்பவத்தைத் தொடர்ந்து உக்ரைனில் விமான சாகசக் கண்காட்சிகள் நடத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications