பெண் வழக்கறிஞரை ஆபாசமாக திட்டிய அதிமுக எம்.எல்.ஏ.
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ. ஸ்ரீனிவேலின் உருவப் பொம்மையை எரித்து போராட்டம் நடந்தது.
ஸ்ரீனிவேலின் மருமகன் வீட்டில் தங்கராஜ் என்பவர் டிரைவராகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவர் கார் ஓட்டிச் சென்றபோதுவிபத்துக்குள்ளாகி கால் உடைந்தது. இதையடுத்து அவருக்கு ரூ. 1 லட்சம் இன்சூரன்ஸ் தொகை வந்தது.
இந்தத் தொகையை தங்கராஜிடம் தராமல் அதில் பெரும் பங்கை எம்.எல்.ஏ. வீட்டினர் லபக் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பணத்தைஎவ்வளவோ முறை கேட்டுப் பார்த்தும் எம்.எல்.ஏ. வீட்டினர் தராததால் அவர்கள் மீது வழக்குத் தொடர ரஜினி என்ற பெண் வழக்கறிஞரைதங்கராஜ் சந்தித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து எம்.எல்.ஏவிடம் வழக்கறிஞர் ரஜினி பேசியுள்ளார். அப்போது ரஜினியை எம்.எல்,ஏ. ஸ்ரீனிவேல் தகாதவார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதையடுத்து புரட்சி வேங்கைகள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரஜினிக்கு ஆதரவாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்வக்கீலை ஆபாசமாகத் திட்டிய எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே கூடிஆர்பாட்டம் நடத்தினர்.
பின்னர் திடீரென எம்.எல்.ஏவின் உருவப் பொம்யை எரித்தனர்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து புரட்சி வேங்கைகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலரைக் கைதுசெய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications