காலியாகக் கிடக்கும் 12,000 பி.இ. சீட்கள்: ஆகஸ்டில் சிறப்பு கவுன்சலிங்
சென்னை:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சுமார் 12,000 இடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன.
பி.இ. படிப்பிற்கான கவுன்சலிங் நேற்றுடன் (திங்கள்கிழமை) முடிவடைந்த நிலையில் இன்னும் 11,902 இடங்கள்காலியாகவே உள்ளன. மொத்தமுள்ள பி.இ. சீட்டுகளின் எண்ணிக்கையில் இது 21.5 சதவீதம் ஆகும்.
"ப்ரீ சீட்" பிரிவின் கீழ் மட்டுமே இன்னும் 1,754 இடங்கள் (ஓ.சி.-2, பி.சி.-65, எம்.பி.சி.-489, எஸ்.சி.-1,018,எஸ்.டி.-180) காலியாக உள்ளன. எஞ்சியுள்ள 10,148 இடங்கள் "பேமெண்ட் சீட்" பிரிவின் கீழ் காலியாக உள்ளன.
இவற்றில் கம்ப்யூட்டர் சயின்ஸ் (3,492) மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி (3,206) பாடப் பிரிவுகளில் மட்டும்6,698 இடங்கள் காலியாக உள்ளன.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 1,695 இடங்கள் காலியாக உள்ளன.
காலி இடங்கள் ஏற்படக் கூடாது என்பதைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில்சேர்வதற்கான குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் நன்றாகக் குறைக்கப்பட்டன.
அப்படி குறைத்த போதிலும் சுமார் 12,000 காலி இடங்கள் இந்த ஆண்டு ஏற்பட்டு விட்டன.
இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் பொறியியல்கல்லூரிகளிலும் மற்றும் பல சுயநிதிக் கல்லூரிகளிலும் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.
104 சுயநிதிக் கல்லூரிகளில் மட்டும் தான் காலி இடங்கள் ஏற்பட்டுள்ளன. அதிலும் பெரும்பான்மையானஇடங்கள் "பேமெண்ட் சீட்" பிரிவின் கீழ் தான் காலியாக உள்ளன.
கவுன்சலிங் மூலம் நேற்று கடைசியாக பி.இ. படிப்பில் சேர்ந்த மாணவரின் கட் ஆப் மதிப்பெண் 100.74.
ஆகஸ்டு 2ல் சிறப்பு கவுன்சலிங்:
இதையடுத்து பி.இ. படிப்புக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக வரும் ஆகஸ்டு 2ம் தேதி சிறப்புகவுன்சலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஆகஸ்டு 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்திற்குமாணவ-மாணவிகள் நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.450 (எஸ்.சி. மற்றும்எஸ்.டி. - ரூ.250).
அன்று இரவு 8 மணிக்கே ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். மறுநாள் காலை 9 மணிக்கு கவுன்சலிங் தொடங்கும்.
கவுன்சலிங்கிற்கு வரும் மாணவ-மாணவிகள் இதற்காக ரூ.5,200 (எஸ்.சி. மற்றும் எஸ்.டி.-ரூ.1,100) கட்டவேண்டும்.
மேலும், "ப்ரீ சீட்" பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரூ.12,500ம், "பேமெண்ட் சீட்" பிரிவின் கீழ்தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரூ.47,000ம் கட்டணமாக ஆகஸ்டு 4ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஆகஸ்டு 7ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஆஜராகவேண்டும்.












Click it and Unblock the Notifications