ராணுவ ஆராய்ச்சி மையத்தை விட்டு வெளியேறும் விஞ்ஞானிகள்
டெல்லி:
இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஓவில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் 331 விஞ்ஞானிகள் ராஜினாமாசெய்துள்ளனர். இவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிகளில் சேர்ந்துள்ளனர்.
இத் தகவலை பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
பல டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் சாப்ட்வேர் உள்ளிட்ட தொழில்களுக்குப் போய்விட்டனர். ஊதியம் அதிக அளவில் இருப்பதால் ராணுவஆராய்ச்சிப் பணிகளை விட்டுவிட்டு சாப்ட்வேர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடும் போக்கு விஞ்ஞானிகளிடையேஅதிகரித்து வருவதாகவும் பெர்னாண்டஸ் கூறினார்.
ஆனால், 5வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அரசு அமலாக்கியதால் விஞ்ஞானிகளின் ஊதியம் அதிகரித்துள்ளது. இதனால்வெளிநாட்டு வேலைகளைத் தேடும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் குறைய ஆரம்பித்துள்ளது. மேலும் அதிக ஊதியம்வழங்குவது குறித்தும் மத்திய அரசு யோசித்து வருவதாக பெர்னாண்டஸ் கூறினார்.
இதே போல ராணுவத்திலும் அதிகாரிகள் மட்டத்தில் 12,554 பதவிகள் காலியாக இருப்பதாகவும் உரிய நபர்கள் கிடைக்காததால் இவைகாலியாக உள்ளதாகவும் கூறினார். கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள போர் பயிற்சிகள் குறித்த ஆராய்ச்சியில் புனேபல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இத் திட்டத்துக்கு ராணுவம் நிதியுதவு செய்து வருகிறது என்றார் பெர்னாண்டஸ்.
பிரிட்டன் போர் விமானங்கள்:
இந் நிலையில் சேனல் 4 என்ற பிரிட்டன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள பெர்னாண்டஸ், இந்திய விமானப் படைக்கு ஹாக் ரகபோர் விமானங்களை இங்கிலாந்திடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இப்போது விலை குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக போர் பயிற்சி விமானத்தை விமானப் படை கேட்டு வருகிறது. ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகள் இதைகண்டுகொள்ளாமல் இருந்து வந்தன.
பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சரான பின்னர் தான் இந்தக் கோரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுத்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
உரிய போர் பயிற்சி விமானம் இல்லாததால் அதிவேக மிக் விமானங்களில் இந்திய விமானிகள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதனால்நூற்றுக்கணக்கான மிக் ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி நாட்டுக்கு பெரும் பொருள் நஷ்டமும் மிகச் சிறந்த விமானிகளை இழக்கவேண்டிய துயரமும் ஏற்பட்டுள்ளது.
இப்போது 66 ஹாக் ரக போர் விமானங்களை ரூ. 4,200 கோடி செலவில் இந்தியா வாங்கவுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications