பெற்றோர் அலட்சியத்தால் ஆணுறுப்பை இழந்த 4 மாத குழந்தை
சேலம்:
சேலம் அருகே பெற்றோரின் அஜாக்கிரதையால் 4 மாதமே நிரம்பிய சிறுவன் தனது ஆணுறுப்பை பறிகொடுத்துள்ளான்.
சேலம் அருகே உள்ள சித்தர் கோவில் செம்மண் திட்டுப் பகுதியைச் சேர்ந்த பட்டறைத் தொழிலாளி சீனிவாசன் (30). அவருடைய மனைவி பழனியம்மாள் (28). இவர்களுக்கு ஷர்மிளா என்ற 2 வயது பெண் குழந்தையும், மணிகண்டன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
சீனிவாசன் ஏதோ ஒரு வேலையாக வெளியே சென்றிருந்தார். அவனது அம்மாவும் ஒரு வேலையாக வெளியே செல்ல வேண்டியிருந்ததால் தனது 4 மாத மகனை தூங்க வைத்து விட்டு, தங்களது செல்ல நாயையும் பக்கத்தில் அமர வைத்து விட்டு வெளியே சென்று விட்டார்.
மணிகண்டனை வெற்றுடம்போடு படுக்க வைத்து விட்டு அந்தத் தாய் போய் விட்டார். உடலின் ஒரு ஒரு துணி கூட போடவில்லை.
மணிகண்டனுக்கு அருகே அமர்ந்திருந்த நாய், அவனது ஆணுறுப்பை பார்த்து அதைக் கடித்துள்ளது. இதையடுத்து அந்த சின்னஞ்சிறு பிஞ்சு கதறியுள்ளான். அவனது சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளோர் மற்றும் குழந்தையின் அம்மா ஆகியோர் ஓடி வந்துள்ளனர்.
ஆனால் அதற்குள் ஆணுறுப்பைக் கடித்து விட்ட நாய், அதை வாயில் கவ்விக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டது.
பதறிப்போன அந்த குழந்தையின் தாயார் பழனியம்மாண் உடனடியாக தனது மகனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது. கடைசி வரை ஆணுறுப்பு இல்லாமலேயே தான் குழந்தை இருக்க முடியும் என்று கூறி விட்டனர்.
அலட்சியமாக இருந்ததால் தனது மகனின் வாழ்க்கையே நாசமாகி விட்டதை அறிந்த அந்தத் தாயார் கதறி அழுதார்.
துண்டிக்கப்பட்ட ஆண் உறுப்பைச் சரி செய்வதற்காக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications