பா.ஜ.க. மோசடி: உரிமங்களை ரத்து செய்தார் வாஜ்பாய்
டெல்லி:
டெண்டர்களே விடாமல் இஷ்டத்துக்கு பா.ஜ.க. எம்.பிக்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஒதுக்கப்பட்ட 3,158 பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜெண்சி உரிமங்களை பிரதமர் வாஜ்பாய் இன்று ரத்து செய்தார்.
கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக 2000ம் ஆண்டு ஜனவரியில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி டெண்டர்கள் விடாமல் வீரர்களின் குடும்பத்தினருக்கு பெட்ரோல் பங்குகளையும் கேஸ் ஏஜென்சிகளையும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
முழுக்க முழுக்க நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களை வாழ வைக்க கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தில் பா.ஜ.கவினர் நாடு முழுவதும் புகுந்து விளையாடியுள்ளனர்.
பா.ஜ.க. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் என பலருக்கும் இந்த ஏஜென்சிகளும் பங்குகளும் டெண்டர்கள் இல்லாமல் சகட்டுமேனிக்கு ஒதுக்கப்பட்டன.
வாஜ்பாயின் உறவுப் பெண்:
இதில் பிரதமர் வாஜ்பாயின் உறவினரான அபர்ணா மிஸ்ரா என்ற பெண்ணுக்கும் ஒரு பெட்ரோல் பங்க் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் வசித்து வருகிறார்.
இவர்களின் பெயர்களை முழு விவரத்துடன் மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு இந்தி பத்திரிக்கை வெளியிட்டதால் அதை மறைக்க முடியாமல் மத்திய அரசு தடுமாறியது. விவகாரத்தை எதிர்க் கட்சிகள் பெரிதாக்கினால் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் பெரும் அடி விழும் என்பதால் இன்று பிரதமர் வாஜ்பாய் இதில் தலையிட்டார்.
2000ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பின் இவ்வாறு டெண்டர் இல்லாமல் தரப்பட்ட அனைத்து பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜென்சி, மண்ணெண்ணெய் ஏஜென்சி உரிமங்களை இன்று ரத்து செய்தார் வாஜ்பாய். அதே நேரத்தில் கார்கில் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டர் மூலமே இனி இந்த ஏஜென்சிகளின் உரிமங்கள் விற்கப்படும் என பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தை எதிர்க் கட்சிகள் விடுவதாக இல்லை. இத்தனை காலம் காங்கிரஸ் கட்சியை போபர்ஸ் ஊழலுக்குக்கா போட்டு வாட்டிய பா.ஜ.க. செய்துள்ள மிகப் பெரிய தேசிய ஊழல் இது என காங்கிரஸ் எம்.பி. தாஸ்முன்ஷி கூறினார்.
பெட்ரோலிய அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும், மக்கள் பணத்தை மோசடி செய்த பெட்ரோலியத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த விவகாரம் குறித்து முழு அளவில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரியுள்ளன.
பா.ஜ.க. அரசின் ஊழல்களில் இது ஒரு துளி தான் என மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்கள் கூறியுள்ளன. இக் கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரிமத்தை ரத்து செய்துவிட்டதால் மட்டும் பா.ஜ.க. புனிதராகிவிட முடியாது.
நாட்டின் சொத்தை தங்கள் கட்சியினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பகிர்ந்து கொடுத்து ஊழலையும் மோசடியையும் ஒரு நிறுவனம் போல நடத்தியுள்ளனர் பா.ஜ.க. தலைவர்கள்.
மக்களின் வரிப் பணத்தை சுருட்டி விழுங்க முயன்ற அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வாஜ்பாய் அரசின் மீது மக்கள் இழந்துவிட்ட நம்பிக்கையை மீண்டும் பெற முடியாது என்று அக் கட்சிகள் கூறியுள்ளன.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications