சென்னை ரயில் நிலையத்தில் உ.பி. மாணவி தற்கொலை
சென்னை:
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளம் மாணவி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ரயில் நிலையக் கழிவறையைச் சுத்தம் செய்யும் பெண் ஊழியர் அங்கே சென்றார்.
அப்போது ஒரு இளம் பெண் அங்குள்ள குடிநீர் குழாயில் தன்னுடைய துப்பட்டாவைக் கட்டி அதில் பிணமாகத் தொங்கினார்.
இதைப் பார்த்ததும் அந்தப் பெண் ஊழியர் அதிர்ச்சி அடைந்து ரயில்வே போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து சென்று அந்தப் பெண்ணின் உடலை மீட்டனர். அவர் வைத்திருந்த ஒரு கைப்பையில் அவருடைய பி.ஏ. சான்றிதழும் ஒரு டைரியும் கிடைத்தது.
ஆனால் அந்த டைரியில் எழுதப்பட்டிருந்த முகவரியும் டெலிபோன் எண்ணும் பேனா மையால் சுத்தமாக அழிக்கப்பட்டிருந்தது. பிறகு நீண்ட நேரம் தேடிய பின் ஒரு டெலிபோன் எண்ணைப் போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த எண்ணைக் கொண்டு அந்தப் பெண்ணின் பெற்றோரைப் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிய போது தான் அந்தப் பெண் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜான்கிலதா என்பது தெரிய வந்தது.
ஒரு வாரத்திற்கு முன் பெற்றோருடன் சண்டை போட்டு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஜான்கிலதா வெளியேறி சென்னை வந்துள்ளதாகத் தெரிகிறது.
அவருடைய பெற்றோர் போனில் பேசும் போது சரியாகவே பேசாமல் அழுது கொண்டே இருந்தனர். இதையடுத்து அவர்களை உடனடியாக சென்னை வருமாறு போலீசார் அழைத்தனர்.
அவர்கள் வந்த பிறகு தான் ஜான்கிலதாவின் தற்கொலைக்குக் காரணம் தெரிய வரும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications