மக்களை ஏமாற்றிய செளடாம்பிகா நிதி நிறுவன கட்டடம் சீல்
சேலம்:
சேலத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் நிதி வசூல் செய்துவிட்டு கம்பி நீட்டிய செளடாம்பிகா நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் விளம்பரங்களுடன் செயல்பட்டு வந்தது இந்த செளடாம்பிகா நிதி நிறுவனம். ஏகப்பட்ட வட்டி, பரிசுகளைக் காட்டி மக்களை ஏமாற்றியது.
இவர்களிடம் ஏமாந்த சுமார் 2,500 பேர் இதில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால், சில மாதங்களுக்கு முன் இந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு வட்டி தர மறுத்தது. தொடர்ந்து பலருக்கு முதலீட்டுப் பணத்தையும் தர மறுத்தது.
இதையடுத்து பொருளாதார குற்றவியல் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த நிறுவனத்தின தலைவரான மனோகரன், இவரது மனைவி ஜெய ஸ்ரீ ஆகியோரை கைது செய்தனர்.
இந் நிலையில் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சேலத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்தனர். இந்தக் கட்டடத்தின் மதிப்பு மட்டும் ரூ. 2 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட கோட்ட ஆட்சியர் மணி முன்னிலையில் இந்தக் கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications