சோனியா வருகை: மதுரையில் கருப்புப் பூனைப் படை டி.ஜி.பி. ஆய்வு
மதுரை:
மதுரையில் காங்கிரஸ்- த.மா.கா. இணைப்பு விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்வதையடுத்து இந்த விழா நடக்கவுள்ள தமுக்கம் மைதானத்தைப் பார்வையிட டெல்லியில் இருந்து சிறப்புப் பாதுகாப்புப் படையினர் மதுரை வந்தனர்.
கருப்புப் பூனைப் படையின் டி.ஜி.பியான பட்நாயக் தலைமையிலான அதிகாரிகள், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் மதுரையில் இந்த மைதானத்தைப் பார்வையிட்டனர்.
அவர்களுடன் மதுரை வந்த த.மா.கா. தலைவர் வாசனுடனும் ஆலோசனை நடத்தினர். பின்னர் மதுரை நகர காவல்துறை அதிகாரிகளும் இந்தக் குழுவினரைச் சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர்.
தமுக்கம் மைதானம் தவிர வேறு சில மாற்று இடங்களையும் அதிகாரிகள் பார்வையிட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
சோனியா காந்திக்கு பிரதமருக்கு இணையான மிக அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அரங்குகளில் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
அதோடு நூற்றுக்கணக்கான உளவுப் பிரிவினரும் பாதுகாப்புப் பணிகளில் மறைமுகமாக ஈடுபடுகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications