தேனி: மழை வேண்டி 3 நாள் உண்ணா நோன்பு இருக்கும் முஸ்லீம்கள்

Subscribe to Oneindia Tamil

தேனி:

மழை பெய்ய வேண்டும் என்பதற்காக 35 ஆண்டுகளுக்குப் பின்னர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் 3 நாட்களுக்கு உண்ணா நோன்பு இருப்பதோடு நில்லாமல் 2,000 பேருக்கு அன்னதானமும் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால் தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சி தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.

மழை வேண்டி பல இடங்களில் கழுதைக்குத் திருமணம், கருடனுக்கு இறுதிச் சடங்கு உள்ளிட்ட பல சம்பிரதாய நிகழ்ச்சிகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் மழை பெய்ய வேண்டி மூன்று நாட்களுக்கு உண்ணா நோன்பு இருந்து வருகின்றனர்.

மேலும் இதையொட்டி அவர்கள் சுமார் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கியும் வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள சுமார் 50,000 ஏக்கர் விளைநிலங்கள் இந்த ஆண்டு மழை பெய்து விட்டதால் கருகிப் போய் விட்டன. இதையடுத்து தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ள பகுதியில் இந்த உண்ணா நோன்பையும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் மேற்கொண்டுள்ள முஸ்லீம்கள் இவ்வாறு செய்தால் நன்றாக மழை பெய்யும் என்று தீவிரமாக நம்புகின்றனர்.

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல் உண்ணா நோன்பு இருந்ததாகவும் அப்போது நன்றாக மழை பெய்ததாகவும் அதே போல் இப்போதும் மழை பெய்யும் என்றும் ஒரு முஸ்லீம் மிகவும் நம்பிக்கையுடன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+