இன்று நீதிமன்றம் வருகிறார் வைகோ
வேலூர்:
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின்நீதிமன்றக் காவல் முடிவடைவதைத் தொடர்ந்து அவர் இன்று வேலூர் சிறையிலிருந்து சென்னையில் உள்ள பொடாதனி நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படுகிறார்.
கடந்த ஜூன் 29ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் புலிகளைஆதரித்துப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வைகோ, ஜூலை 11ம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பியதும்சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் வைகோவை 28 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க திருமங்கலம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதிவெங்கடாஜலபதி உத்தரவிட்டார். இதையடுத்து வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே பொடா சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னை-பூந்தமல்லியில் தனிநீதிமன்றத்தை தமிழக அரசு அமைத்தது. நீதிபதி எல். ராஜேந்திரன் பொடா தொடர்பான வழக்குகளை விசாரித்துவருகிறார்.
இந்நிலையில் வைகோவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது.
இதையடுத்து வேலூர் சிறையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்படும் வைகோ, பூந்தமல்லியில் உள்ளபொடா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். இந்த நீதிமன்றத்தில் இன்று தான் வைகோ முதல் முறையாகஆஜர்படுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைகோவின் காவலை நீட்டிக்கச் சொல்லி க்யூ பிராஞ்ச் போலீசார் பொடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார்கள்என்று தெரிகிறது.
வைகோ தவிர பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மற்ற 8 மதிமுகவினரும் இன்று தனி நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
இதையொட்டி பூந்தமல்லி தனி நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications