சென்னை போலீசாரிடம் ஜெ. குறை கேட்கும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
சென்னை:
சென்னை மாநகரப் போலீசாரிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறை கேட்கும் நிகழ்ச்சி இன்றைக்குப் பதில் வரும்14ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போலீசாரிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி இந்தியாவிலேயே முதன் முறையாகத் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது.கடந்த ஜூலை 26ம் தேதி முதல் கட்டமாக தென் மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 1,700 போலீசாரிடம் ஜெயலலிதாகுறைகேட்டார்.
பின்னர் கடந்த ஆகஸ்டு 2ம் தேதி மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 1,700 போலீசாரிடமும் ஆகஸ்டு 5ம் தேதிமத்திய மண்டலத்தின் 1,200 போலீசாரிடமும் குறைகளைக் கேட்டு மனுக்களையும்பெற்றுக் கொண்டார்ஜெயலலிதா.
இந்நிலையில் சென்னை மற்றும் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த போலீசார், சிறைத்துறை காவலர்கள் மற்றும்தீயணைப்புத்துறையினர் ஆகியோரிடம் இன்று ஜெயலலிதா குறை கேட்பதாக இருந்தது.
ஆனால் இதற்காக 3,000க்கும் மேற்பட்ட போலீசார் விண்ணப்பித்துள்ளனர். இவ்வளவு பேரிடமும் ஒரே நாளில்குறை கேட்பது முடியாத காரியம் என்பதால் இதற்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த போலீசாரிடம் மட்டும் ஜெயலலிதா இன்று குறைகளைக் கேட்பார்.அவர்களிடமிருந்து மனுக்களையும் அவர் இன்று பெற்றுக் கொள்வார்.
சென்னை மாநகரப் போலீசாரிடம் அவர் குறை கேட்கும் நிகழ்ச்சி வரும் 14ம் தேதிக்கு (அடுத்த புதன்கிழமை)ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சுமார் 2,000 போலீசார் இந்தக் குறை கேட்கும் நிகழ்ச்சிக்குவிண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications