சென்னை, கலிங்கப்பட்டி வீடுளில் க்யூ பிராஞ்ச் போலீசார் ரெய்ட்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினரின்வீடுகள், கட்சியின் தலைமையகமான "தாயகம்" அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று அதிகாலை க்யூபிராஞ்ச் போலீசார் அதிரடிச் சோதனையைத் தொடங்கினர்.
வைகோ உள்ளிட்ட 9 மதிமுக பிரமுகர்களின் சிறைக் காவலை மேலும் 28 நாட்களுக்கு நீட்டித்துசென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா தனி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அப்போது வைகோ வீடு உள்ளிட்ட பல மதிமுக பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்றுதமிழக க்யூ பிராஞ்ச் டி.எஸ்.பி. மகேந்திரன் கடந்த 5ம் தேதி தாக்கல் செய்திருந்த மனுவும் நேற்று விசாரணைக்குவந்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி எல். ராஜேந்திரன் மதிமுகவின் தலைமையகமான "தாயகம்", வைகோ வீடு, மதிமுகபிரமுகர்களின் வீடுகள் உள்பட 12 இடங்களில் சோதனை நடத்த க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு அனுமதிவழங்கினார்.
இதையடுத்து எந்த நேரத்திலும் போலீசார் இவ்விடங்களில் சோதனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை 8 மணிக்கு சென்னை-அண்ணாநகரில் உள்ள வைகோவின் வீட்டுக்குப் போலீசார்சென்று அதிரடியாகச் சோதனை நடத்தினர். க்யூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப் போலீஸ்படை அங்கு சென்றது.
வைகோவின் வீட்டு வாசலில் 4 போலீசார் நின்று கொள்ள, 6 போலீசார் வீட்டுக்குள் சென்றனர். உடனேவைகோவின் குடும்பத்தினர் சோதனைக்கான வாரண்ட் உள்ளதா என்று கேட்டனர். போலீசாரும் உடனே சோதனைவாரண்ட்டை அவர்களிடம் காட்டி விட்டு உள்ளே செல்ல முயன்றனர்.
ஆனால் அவர்களை மீண்டும் தடுத்த வைகோவின் குடும்பத்தினர், வீட்டில் நிறைய பெண்கள் இருப்பதால்சோதனை நடக்கும் போலீஸ் குழுவில் பெண் போலீசாரும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் சோதனைக்குச் சென்ற போலீஸ் குழுவில் ஆண் போலீசார் தான் இருந்தனர். உடனே செல் போன் மூலம்க்யூ பிராஞ்ச் தலைமைக்குத் தகவல் பறந்தது. அடுத்த சிறிது நேரத்தில் சில பெண் போலீசாரும் வைகோ வீட்டுக்குவந்து சேர்ந்தனர்.
அதன் பிறகே அவர்கள் சோதனை நடத்துவதற்கு வைகோவின் குடும்பத்தினர் அனுமதித்தனர். இதனால் இங்குசுமார் அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னரே போலீசார் தங்கள் சோதனையைத் தொடங்கினர்.
வீட்டுக்கு வெளியிலிருந்து உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதே போல் வீட்டுக்கு உள்ளேஇருப்பவர்களையும் போலீசார் வெளியே போக அனுமதிக்கவில்லை.
வைகோவின் மனைவி ரேணுகா தேவி, மகன் வையாபுரி, மதிமுக பிரமுகர் குருநாதன் ஆகியோர் அப்போதுவைகோவின் வீட்டில் இருந்தனர்.
விடுதலைப்புலிகளுடன் வைகோவுக்கு உள்ள தொடர்பு சம்பந்தமான ஆவணங்கள் ஏதும் கிடைக்கிறதா என்றுபோலீசார் தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர்.
கலிங்கப்பட்டியில்...
இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவின் சொந்த வீட்டிலும் இன்று காலைபோலீசார் சோதனை நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்ட டி.எஸ்.பி. லியோ தலைமையில் க்யூ பிராஞ்ச் போலீசார் இங்கு சோதனை நடத்தினர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications