வைகோ நீதிமன்றத்தில் பேசட்டும்: ஜெ.
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீடுகளில் நடந்த சோதனைகள் குறித்து பொடா நீதிமன்றத்தில் நாங்கள்விளக்கமளிப்போம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் ஜெயலலிதாநிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ மற்றும் மதிமுக பிரமுகர்களின்வீடுகளில் இன்று க்யூ பிராஞ்ச் போலீசார் நடத்திய சோதனைகள் குறித்து அப்போது ஒரு நிருபர் ஜெயலலிதாவிடம்கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, இது குறித்து நாங்கள் பொடா தனி நீதிமன்றத்தில் விளக்கமளிப்போம் என்றுகூறினார்.
பொடா சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்தது ஜெயலலிதாவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே என்றுநேற்று வைகோ கூறியுள்ளாரே என்று மற்றொரு நிருபர் கேட்டதற்கு, அதை அவரே நேரடியாக நீதிமன்றத்தில்கூறிக் கொள்ளட்டும் என்று பதிலளித்தார் ஜெயலலிதா.
டெல்லி செல்ல வைகோ கோரிக்கை:
இதற்கிடையே துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தன்னை டெல்லி செல்ல அனுமதிக்க வேண்டும்என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார்.
வரும் 12ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாஎம்.பிக்கள் மட்டும் தான் வாக்களிக்க முடியும்.
தற்போது பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவகாசிஎம்.பியான வைகோவும் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவுள்ளார்.
இதற்காக வைகோவை டெல்லி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி அவர் சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
துணை ஜனாதிபதி தேர்தலில் அவர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஏற்கனவே தேர்தல் கமிஷன்அனுமதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 15ம் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வேலூர் சிறையிலிருந்துசென்னை வந்துவாக்களித்த வைகோ பின்னர் மீண்டும் சிறைக்குச் சென்றார் என்பது நினைவிருக்கலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications