சதுரகிரி மலை ஆடி அமாவாசை விழா நெரிசலில் சிக்கி 3 முதிய பக்தர்கள் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் ஆடி அமாவாசையையொட்டி திரண்டு வந்திருந்த பக்தர்களின்கூட்ட நெரிசலில் சிக்கி வயதான 3 பக்தர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
காமராஜர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்ஆடி அமாவாசையின் போது விழா நடக்கும்.
இதன் சுற்றுப் புறத்தில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அப்போது சதுரகிரியின்மலையில் ஏறி மலை உச்சியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலில் வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டும் நேற்று ஆடி அமாவாசை விழா இங்கு கோலாகலமாகத் தொடங்கியது. சுமார் நான்கு லட்சம்பக்தர்கள் திரண்டு வந்து கோவிலில் வழிபட்டனர். இந்தக் கோவிலில் 18 வகையான சிறப்பு பூஜைகள் நேற்றுகாலை முதல் நடந்தன.
மலை ஏறும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பக்தர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த பலராமன் (55), மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளஎஸ். மேலப்பட்டியைச் சேர்ந்த ராசு (55) மற்றும் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர்ஆகியோர் தான் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே தமிழகத்தில் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் ஆடி அமாவாசை விழா கோலாகலமாகக்கொண்டாடப்பட்டது. ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று இதையொட்டி புனித நீராடினர்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் வாழப்பாடி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பாயுடன் மணமக்கள் போட்டா போட்டி.. 5 நிமிடத்தில் 90 திருமணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications