மதுரை ரிங் ரோடு மைதானத்தில் காங்கிரஸ்-தமாகா இணைப்பு விழா
மதுரை
காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரசை இணைக்கும் விழா ஒரு வழியாக முடிவு செய்யப்பட்டு விட்டது.மதுரை ரிங் ரோடு மைதானத்தில் உள்ள ஒரு இடத்தில் இணைப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கானபூஜையும் நடந்து விட்டது.
மதுரையில் வரும் 14ம் தேதி சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணைகிறது. இதைபிரமாண்டமான விழாவாக நடத்த இரு கட்சிகளும் முடிவு செய்து ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஆனால் விழா நடக்கும் இடம் குறித்து பெரும் குழப்பம் நிலவி வந்தது.
முதலில் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் விழா நடத்தப்படும் என்றார்கள். ஆனால் விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தவிரவேறு நிகழ்ச்சிகளுக்கு மைதானம் தரப்பட மாட்டாது என்று அரசு அறிவித்து விட்டது. இதனால் அதிர்ச்சியடைந்தகாங்கிரஸ் மற்றும் தமாகவினர் வேறு இடத்தைத் தேடத் தொடங்கினர்.
அதன் பிறகு தமுக்கம் மைதானத்தில் விழா நடக்கும் என்றார்கள். ஆனால் அதை ஏற்க சோனியாவுக்கு பாதுகாப்புஅளிக்கும் சிறப்பு அதிரடிப்படையினர் நிராகரித்து விட்டனர். மேலும் மதுரை மருத்தவக் கல்லூரிமைதானத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.
இந்த நிலையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரிங் ரோட்டில் ஒரு மைதானத்தில்இணைப்பு விழா நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் சிவகங்கை ரோட்டில் உள்ள பாண்டி கோவில் அருகேஇந்த மைதானம் அமைந்துள்ளது. இதற்கு போலீஸாரும் அனுமதி அளித்துள்ளனர்.
நேற்று இதற்கான பந்தக்கால் நடும் விழாவும் பூஜையும் நடைபெற்றது. சோ. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தமாகாமற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.
ரிங் ரோடு பாதுகாப்பானதா?
இதற்கிடையே மதுரை ரிங் ரோட்டில் இணைப்பு விழா நிகழ்ச்சி நடத்துவது மிகவும் ஆபத்தானது என்ற கருத்துநிலவுகிறது.
பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மதுரை ரிங் ரோடு விளங்கி வருகிறது.திருமங்கலத்திலிருந்து தப்பிய ஹைதர் அலியும், இமாம் அலியும் ரிங் ரோட்டில் வைத்துத் தான் வேறுஇடங்களுக்கு ஓடினர்.
மேலும் அடிக்கடி கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்களும் இங்கு நடந்து வருகின்றன. நக்சல்களும் இங்குஅதிக அளவில் நடமாடி வருவதாகவும் கூறப்படுகிறது.
மொத்தம் 27 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரிங் ரோட்டில் தீவிரவாதிகளால் உயிருக்கு ஆபத்து உள்ள சோனியாகாந்தி போன்ற தலைவர்கள் வருவது போலீசாருக்கு பெரும் தலைவலியாக கருதப்படுகிறது.
சமீபத்தில் ஜெயலலிதா மதுரை வந்தபோது கூட அவரது நிகழ்ச்சியை இங்கு நடத்தலாமா என்று முதலில்ஆலோசித்து பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அதை போலீஸ் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.
ஆனால் இப்போது சோனியா காந்தி கலந்து கொள்ளும் இந்த இணைப்பு விழா நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதிஅளித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இணைப்பு விழா நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் பந்தல் மற்றும் மேடை அமைக்கும்பணிகளில் காங்கிரஸ் மற்றும் தமாகாவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications