ஜெ. புகார் கடிதம்: அத்வானியிடம் நேரில் விளக்கமளித்தார் கண்ணப்பன்
டெல்லி:
விடுதலைப்புலிகளைத் தொடர்ந்து ஆதரித்துப் பேசி வருவதால் மத்திய அமைச்சரவையிலிருந்து மதிமுக அமைச்சர்கண்ணப்பனை நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அனுப்பிய புகார் கடிதம் தொடர்பாக துணைப் பிரதமர்அத்வானியிடம் கண்ணப்பன் நேரில் விளக்கமளித்தார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகளை வெளிப்படையாக ஆதரித்துப் பேசி வருவதால் கண்ணப்பன்சட்டத்தை மீறியுள்ளார் என்றும் அதனால் அவரை மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும்பிரதமர் வாஜ்பாய்க்கும் அத்வானிக்கும் சமீபத்தில் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இது தொடர்பாக மற்றொரு மதிமுக அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனிடம் டெலிபோன் மூலம் விளக்கம் கேட்டஅத்வானி, கடிதம் மூலம் கண்ணப்பனிடம் விளக்கம் கேட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அத்வானியின் அலுவலகத்தில் ராமச்சந்திரனும்கண்ணப்பனும் அவரைச் சந்தித்தனர். அப்போது அவரிடம் விளக்கமளித்து கண்ணப்பன் கூறுகையில்,
ஜெயலலிதா கூறுவதில் எந்த விதமான உண்மையும் இல்லை. புலிகள் குறித்து கட்சியின் நிலைப்பாட்டைத் தான்பொதுக் கூட்டங்களிலும் நிருபர்களிடமுத் தெரிவித்து வந்தேன்.
இலங்கையில் பல ஆண்டுகளாக தங்களுடைய வாழ்வுரிமைகக்காப் போராடி வரும் தமிழக மக்களுக்குஆதரவாகப் புலிகள் போரிட்டு வருகின்றனர் என்ற ரீதியில் தான் அவர்களுக்கு மதிமுக தார்மீக ஆதரவு அளித்துவருகிறது.
அதே நேரத்தில் எந்த அமைப்பாக இருந்தாலும் சரி, அது இந்திய மண்ணில் வன்முறையில் ஈடுபடுவதையோஇந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுவதையோ மதிமுக என்றும் ஆதரிக்கப் போவதில்லைஎன்பதிலும் நாங்கள் தெளிவாக உள்ளோம்.
அதைத் தான் நாங்கள் எல்லாக் கூட்டங்களிலும் தெரிவித்து வருகிறோம். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும்அதைத் தான் கூறி வருகிறார் என்று விளக்கமளித்தார் கண்ணப்பன்.
இதை அப்படியே விளக்கமாக வாஜ்பாய்க்கு அனுப்புங்கள் என்று கண்ணப்பனிடம் கூறிய அத்வானி, அதன்அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு பிரதமர் பதில் கடிதம் அனுப்புவார் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications