கோவையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தின் 3 பேர் கழுத்தை அறுத்து படுகொலை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கழுத்தை அறுத்து மிகவும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர்.
கோயம்புத்தூர் அருகே உள்ளது சேரையாம்பாளையம் என்ற கிராமம். இங்கு தங்கவேலு-குப்பாத்தாள் என்றதம்பதியும் தங்கவேலுவின் தம்பி சுப்பண்ணாவும் வசித்து வந்தனர்.
அவர்கள் கோழிப்பண்ணை ஒன்றை வீட்டுக்கு அருகிலேயே வைத்து நடத்திக் கொண்டிருந்தனர்.
நேற்று இரவு வீட்டிற்குள் உட்கார்ந்து சுப்பண்ணா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் வீட்டுக்குள்நுழைந்து அவரைப் பயங்கரமாகத் தாக்கி அவருடைய கழுத்தை அரிவாளால் அறுத்துப் போட்டது.
இதில் ரத்த வெள்ளத்தில் "ஓ"வென்று கத்தியவாறு சரிந்த சுப்பண்ணா அந்த இடத்திலேயே பிணமானார்.
அவருடைய சத்தத்தைக் கோழிப்பண்ணையில் இருந்த தங்கவேலுவும் குப்பாத்தாளும் ஓடி வந்து பார்த்தனர்.அங்கு ரத்த வெள்ளத்தில் சுப்பண்ணா பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதைக் கண்ட அந்தக் கொலையாளிகள் இவர்களையும் விடவில்லை. வீட்டுக்குள்ளேயே அவர்களை ஓட ஓடத்துரத்திய கொலையாளிகள் தங்கவேலுவையும் குப்பாத்தாளையும் அதே போலவே கழுத்தை அறுத்துக் கொன்றுபோட்டு ஓடி விட்டனர்.
இத்தனை நடந்த போதிலும் இது குறித்து வெளியே யாருக்கும் தெரியவில்லை. இன்று காலையில் பால்காரர் வந்துபார்த்த போது தான் இந்தக் கொலை விவரம் வெளியே தெரிய வந்தது.
சுப்பண்ணா, தங்கவேலு மற்றும் குப்பாத்தாள் ஆகியோரின் உடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடந்தன. அங்கு பல கோழிகளும் மிதிபட்ட நிலையில் செத்துக் கிடந்தன.
தகவலறிந்தவுடன் போலீசார் விரைந்து அங்கு சென்று விசாரணை நடத்தினர். கழுத்தை அறுத்து மிகவும்கொடூரமாகக் கொலை செய்தவர்களைப் பிடிப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலைக்கானகாரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கள் வீட்டிற்குத் திருடர்கள் வந்தால் எத்தனை கோழிகளை வேண்டுமானாலும் அவர்களுக்குக் கொடுக்கும்அளவு கடந்த இரக்க சிந்தனை கொண்டவர்கள் என்று தங்கவேலு குடும்பத்தைப் பாராட்டும் அக்கம்பக்கத்தில்உள்ளவர்கள் அவர்களுக்கா இந்தக் கதி என்று வேதனையுடன் கூறினர்.
கழுத்தை அறுத்து மிகவும் கொடூரமாக இந்த மூன்று பேரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications