அண்ணா அறிவாலயத்தில் மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பா?
சென்னை:
சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கம் என்றதிருமண மண்டபம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுளளது.
சென்னையின் மையப் பகுதியான அண்ணா சாலையில் சைதாப்பேட்டை அருகே உள்ளது அண்ணா அறிவாலயம்.இது தான் திமுகவின் தலைமை அலுவலகமாகும். இதன் மாடியில் தான் சன் டிவி அலுவலகம் உள்ளது.
இந்தக் கட்டடத்துக்குப் பின் புறம் அதே வளாகத்தில் கலைஞர் அரங்கம் உள்ளது. திமுகவின் நிகழ்ச்சிகள்,கட்சிக்காரர்களின் திருமண நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படுவது வழக்கம்.
கிட்டத்தட்ட 8.5 கிரவுண்ட் விஸ்தாரம் உள்ள இந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.இதன் மதிப்பு ரூ. 9 கோடியை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்தை திமுக ஆக்கிரமித்துகல்யாண மண்டபத்தைக் கட்டியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த இடத்தை சென்னை மாநகராட்சி மீட்கும் என துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அண்ணா அறிவாலயத்தின் பின்புறம் உள்ள இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது.
அதை ஆக்கிரமித்து கல்யாண மண்டபம் கட்டியுள்ளதாக மாநகராட்சி நகரமைப்புத் தலைவர் வெற்றிவேல் புகார்கொடுத்துள்ளார். இது மிகப் பெரிய குற்றச்சாட்டு.
முதலில் அந்த இடத்தை மாநகராட்சியிடம் ஒப்படைப்பதாக திமுக அறக்கட்டளை முடிவு செய்தது. ஆனால்பின்னர் அந்த இடத்தில் கல்யாண மண்டபம் கட்டி விட்டனர்.
அறக்கட்டளையின் பெயரில் அறிவாலயம் உள்ளிட்ட இடங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கலைஞர்அரங்கத்தில் திருமணம் நடத்த காசு வாங்குகிறார்கள். கல்யாணத்திற்கு எவ்வளவு வாடகை வாங்குகிறார்கள்,எத்தனை கல்யாணங்கள் அங்கு நடந்துள்ளது, முறையாக வரி கட்டியுள்ளார்களா என்பதை ஆராயவுள்ளோம்.
அதன் பிறகு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை கைப்பற்றுவோம் என்றார் கராத்தே தியாகராஜன்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications