கர்நாடகத்தில் கடும் மழை: மேட்டூருக்குப் பாய்கிறது காவிரி நீர்
மேட்டூர்:
கர்நாடகத்தில் இருந்து காவிரில் கரை புரண்டு வரும் வெள்ள நீரால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் இரண்டு அடிஅதிகரித்துள்ளது.
கர்நாடகத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளது. கபினி அணைக்கட்டுஉள்ளிட்ட பல்வேற கர்நாடக அணைக்கட்டுகளில் நீர் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.
இதனால் அணைகளை காப்பாற்ற உபரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய கட்டாயத்தில் கர்நாடகம் உள்ளது. இதையடுத்து நேற்றுமுதல் நீரை கர்நாடகம் திறந்துவிட்டது.
இவ்வாறு திறந்துவிடப்பட்ட நீர் இன்று மேட்டூர் வந்து சேர்ந்தது. இதனால் மேட்டூர் அணையின் மட்டம் ஒரே நாளில் 2 அடிஉயர்ந்துவிட்டது.
நேற்று டெல்லியில் நடந்த காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்குஉத்தரவிடப்பட்டது. ஆனால், அதை கர்நாடகம் உடனடியாக ஏற்கவில்லை.
ஆனால், மழை காரணமாக கூடுதல் நீர் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்குள் பாய ஆரம்பித்துவிட்டது. நேற்று 43.92 அடியாக இருந்தமேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று 46 அடியாக உயர்ந்தது. இந்த அணையின் மொத்த கொள்ளவு 120 அடியாகும்.
கர்நாடகம் உரிய நேரத்தில் நீர் தர மறுத்ததால் தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் சிரமத்தில் உள்ளார்கள்என்பது நினைவுகூறத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications