ஓசூரில் சிக்கினான் கவுஸ் பாட்சா
ஓசூர்:
சென்னையில் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியோடிய பிரபல திருடன் கவுஸ் பாட்சா, ஓசூரில்கொள்ளையடித்தபோது பொதுமக்களிடம் பிடிபட்டான்.
சென்னையில் பல காலமாக திருட்டுக்களில் ஈடுபட்டு வந்தவன் கவுஸ் பாட்சா. திறமையுடன் திருடுவதில்வல்லவனான பாட்சாவுக்கு போலீஸ் துறையிலேயே பலர் நண்பர்களாக இருந்தனர். இதனால் தனது திருட்டுத்தொழிலை பாட்சா ஜாலியாக செய்து வந்தான்.
பாட்சாவின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானதால் அவநைப் பிடிக்க போலீஸார் வலை விரித்தனர். ஆனால்பாட்சா சிக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் கீழப்பாக்கம் பகுதியில் நடந்த திருட்டுக்கள் தொடர்பாகபாஷாவை போலீஸார் தேடினர். போலீஸாரின் தீவிர வேட்டையில் மேற்கு முகப்பேர் போலீஸாரிடம் பாட்சாசிக்கினான்.
கைது செய்யப்பட்ட பாட்சா தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.அப்போது போலீஸாரின் பிடியிலிருந்து நைசாக தப்பி விட்டான் பாட்சா.
இதையடுத்து சமீபத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்த சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார், கவுஸ்பாட்சா உடனடியாகச் சரணடைய வேண்டும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விட்டார். அவ்வாறு சரணடையாவிட்டால் எங்கள் ட்ரீட்மெண்ட் படி அவனைப் பிடிப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது கணவரை போலீஸார் தான் சுட்டுக் கொன்று விட்டதாக கவுஸ் பாட்சாவின் மனைவி கீதா புகார்கூறினார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் (ஆள் கொணர்வு) மனு ஒன்றைத்தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே போலீஸார் பாட்சாவைத் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஓசூர் பகுதியில் ஒரு இடத்தில் பாட்சா திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அவன்பொதுமக்களிடம் பிடிபட்டான்.
அவனைக் கைது செய்தபோது தான் அவன் கவுஸ் பாட்சா என்பது ஓசூர் போலீஸாருக்குத் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து பாட்சா குறித்து சென்னை போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஓசூர் வந்த சென்னைபோலீசார் அவனை மீண்டும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
-->
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications