கஞ்சித் தொட்டி கலாட்டா: இன்று மாலை திமுக நிர்வாகக் குழு முக்கிய முடிவு
சென்னை:
மதுரையில் கஞ்சித் தொட்டித் திறப்பு நிகழ்ச்சியின்போது போலீசார் நடந்து கொண்ட முறையைக் கண்டித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து திமுக நிர்வாகக் குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூடி முடிவு செய்கிறது.
ஓய்வுக்காக பெங்களூர் சென்றிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று பிற்பகல் அவர் சென்னை திரும்பினார்.
அவரிடம் மதுரை கஞ்சித் தொட்டி கலாட்டா குறித்துக் கேட்கப்பட்ட போது அவர் கூறுகையில்,
ஞாயிற்றுக்கிழமை நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். மாலை 4 மணிக்கு கலைஞர் அரங்கத்தில் கூட்டம்நடக்கிறது. அதில் அதிமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் அராஜக நடவடிக்கைகள் குறித்துமுடிவெடுக்கப்படும்.
மதுரையில் போலீஸார் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்கருணாநிதி.
இதற்கிடையே, கஞ்சித் தொட்டி கலாட்டா குறித்து மதுரை போலீஸ் கமிஷனர் சூரிய பிரகாஷ் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கோரி ஆளுநர் ராமமோகன் ராவிடம், திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமிதலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications